தோல்வியே சந்திக்காத மல்யுத்த வீரர்
பிரபல மல்யுத்த வீரரும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான தாரா சிங் (Dara Singh) பிறந்த தினம் இன்று (நவம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
# பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தர்மூசக் என்ற இடத்தில் பிறந்தார் (1928). தாராசிங் ரன்தாவா என்பது இவரது முழு பெயர். தந்தை பெரும்பாலும் வெளியூர்களிலேயே இருந்ததால் மூத்த மகனான இவர் வயல்களில் வேலை செய்து வந்தார். சிறு வயதிலேயே பயில்வானாக வேண்டும் என்பது இவரது ஆசை
# பாதாம் கொட்டைகளை வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு, நிறைய பாலையும் குடித்துவிட்டுப் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம். இதனால் வயதுக்கு மீறிய வளர்ச்சியடைந்தார். 6.2 அடி உயரமும் அதற்கேற்ப ஆஜானுபாகான தோற்றமும் கொண்டிருந்தார்.
# இவரும் இவரது தம்பியும் ஊர் ஊராகச் சென்று மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றனர். 1947-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு பல போட்டிகளில் வென்றார். 1954-ல் இந்தியா திரும்பியபின் இந்திய மல்யுத்த சாம்பியனாக உயர்ந்தார்.
# 1959-ல் முன்னாள் உலக சாம்பியனை வென்று காமன்வெல்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 1968-ல் அமெரிக்க சாம்பியன் லவ் தேஸை முறியடித்து ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து கனடா, நியுசிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், இங்கிலாந்து நாட்டு வீரர்களை வென்றார்.
# ஏறக்குறைய உலகின் அனைத்து மல்யுத்த வீரர்களுடனும் மோதி வென்றுள்ளார். உலகிலேயே தனது அனைத்து எதிரி சாம்பியன்களையும் அவர்கள் நாடுகளிலேயே வென்று பட்டங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெருமை பெற்றார். 55 வயதுவரை 500 தொழில்முறை போட்டிகளில் பங்கேற்றார்.
# அத்தனை போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினார். 1983-ல் இறுதியாகக் களம் இறங்கிய போட்டியிலும் வென்று வெற்றி வீரனாகவே ஓய்வு பெற்றார். இடையிடையே திரைப்படங்களிலும் நடித்து வந்தார். முதலில் பாலிவுட் திரைப்படங்களில் ஸ்டன்ட் நடிகராக தோன்றினார். 1952-ல் ‘சங்தில்’ என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
# இதில் நடிகை மும்தாஜுடன் இணைந்து நடித்திருந்தார். ரசிகர்களிடையே அமோக ஆதரவு பெற்ற இந்த இணை தொடர்ந்து 16 திரைப்படங்களில் ஜோடி சேர்ந்தது. ‘சிகந்தர்-இ-ஆஸம்’, ‘காகான், லுடேரா’, ‘டாகூ மங்கள்சிங்’ மற்றும் ‘இன்சாஃப்’ ஆகிய திரைப்படங்கள் இவரை மிகவும் பிரபலமாக்கின. பல படங்களை இயக்கிய இவர், திரைக்கதைகளையும் எழுதியுள்ளார்.
# மொஹாலி என்ற இடத்தில் தாரா ஸ்டுடியோவைத் தொடங்கி பல படங்களையும் தயாரித்துள்ளார். தனது தாய்மொழியான பஞ்சாபி யில் முதன்முதலாக ‘நானக் துனியா சப் சன்சார்’ என்ற படத்தைத் தயாரித்தார். திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது.
# 50 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த இவரது திரையுலக வாழ்க்கையில் இந்தியிலும் பஞ்சாபி மொழியிலும் சேர்த்து 110-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2003-ல் ராஜ்ய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2007-ல் வெளிவந்த ‘ஜப் வி மெட்’ திரைப்படம்தான் இவரது கடைசி திரைப்படம்.
# மல்யுத்த வீரராக, சினிமா நடிகராக அவருக்குக் கிடைத்த புகழை விட பன்மடங்குப் புகழையும் பெயரையும் ராமாயணம் தொலைக் காட்சித் தொடரில் இவர் ஏற்ற ஹனுமான் கதாபாத்திரம் இவருக்குப் பெற்றுத் தந்தது. மல்யுத்த வீரர், நடிகர், இயக்குநர் ஆகிய பன்முகத் திறன் கொண்டிருந்த தாராசிங் 2012-ம் ஆண்டில் ஜூலை மாதம் 12-ம் தேதி 83-ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago