ஜோஸ் டிசோஸா சரமாகூ 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய எழுத்தாளர் ஜோஸ் டிசோஸா சரமாகூ (Jose de Sousa Saramago) பிறந்த தினம் இன்று (நவம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* போர்ச்சுகல் நாட்டின் ரீபாட்டஜோ மாகாணத்தில் அசின்ஹாகா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் (1922) பிறந்தார். சரமாகூ என்பது காட்டு மூலிகைச் செடியின் பெயர். குழந்தை பிறப்பை பதிவு செய்தபோது தவறுதலாக இந்த பெயரை சேர்க்க, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

* தந்தைக்கு காவல் துறையில் வேலை கிடைத்தது. தலைநகர் லிஸ்பனுக்கு குடிபெயர்ந்தது குடும்பம். இவர் நன்கு படிக்கிற மாணவன். ஆனால், குடும்பச் சூழல் காரணமாக, 12 வயதில் தொழில்நுட்பப் பள்ளியில் சேர்ந்தார். படிப்பை முடித்ததும் 2 ஆண்டுகள் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக வேலை செய்தார்.

* மாலை நேரத்தில் பொது நூலகம் சென்று பல புத்தகங்களைப் படித்தார். சமூக சேவையிலும் ஈடுபட்டார். அப்போதே எழுதவும் தொடங்கினார். இவரது முதல் நூலான ‘லேண்ட் ஆஃப் சின்’ 1947-ல் வெளியானது. 1950-களின் இறுதியில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இதனால், பிரபல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது.

* நாவல்கள் எழுதுவதோடு ஓய்வு நேரத்தில் மொழிபெயர்ப்பும் செய்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை மொழிபெயர்த்தார். நல்ல வருமானம் கிடைத்தது. ‘பாஸிபிள் போயம்ஸ்’ என்ற கவிதை நூலை 1966-ல் வெளியிட்டார். தொடர்ந்து, ‘பிராபப்ளி ஜாய்’, ‘ஃபிரம் திஸ் வேர்ல்டு டு தி அதர்’, ‘டிராவலர்ஸ் பேக்கேஜ்’ ஆகிய நூல்கள் வெளிவந்தன.

* ஒரு நாளிதழின் துணை இயக்குநராக 1975-ல் பொறுப்பேற்றார். சில அரசியல் காரணங்களால் அதில் இருந்து விலக நேரிட்டது. மீண்டும் மொழிபெயர்ப்பில் இறங்கினார். வேறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால், இலக்கியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

* 50 வயதுக்கு மேல் இவர் எழுதிய ‘பால்டாஸர் அண்ட் ப்ளிமுண்டா’ (Baltasar and Blimunda) என்ற நாவல் உலக அளவில் அங்கீகாரத்தையும் வாசகர்களையும் பெற்றுத் தந்தது. இந்த நாவலுக்கு போர்ச்சுகீசிய பென் கிளப் விருது கிடைத்தது 1980-களில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள் என ஏராளமான படைப்புகளை எழுதினார்.

* உலகப் புகழ்பெற்ற நாவலான ‘பிளைண்ட்னஸ்’ 1995-ல் வெளிவந்தது. ‘தி காஸ்பல் அக்கார்டிங் டு ஜீசஸ் கிறைஸ்ட்’ என்ற இவரது நூல் கத்தோலிக்கர்களைப் புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

* இந்த நூலை ஐரோப்பிய இலக்கியப் போட்டிக்கு அனுப்ப போர்ச்சுகல் அரசு தடை விதிக்கும் என்பதால், குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் குடியேறினார். தொடர்ந்து பல நாடகங்கள், நாவல்கள் எழுதி வந்தார்.

* லெபனான், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின. 1993-ல் நாட்குறிப்பு எழுதத் தொடங்கினார். அது ஒரு வரலாற்றுத் தொகுப்பு போல பெருகியது.

* ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோஸ் டிசோஸா சரமாகூ 88-வது வயதில் (2010) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்