ஒரு நிமிடக் கதை: தனிமை

By கீர்த்தி

வீட்டு வேலை எல்லாம் முடிந்துவிட்டது. நேரம் போகவேண்டுமே என்று லட்சுமியின் வீட்டுக்குள் ஏறி வந்த ராஜத்துக்கு லட்சுமியின் நிலைமையைப் பார்த்து பரிதாப மாக இருந்தது.

லட்சுமியின் வீட்டில் ஒரு புறம் அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது. இன்னொரு புறம் துணிகளைத் துவைப்பதற்காக வாளியில் நனைத்து வைத் திருந்தாள். லட்சுமி பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள்.

‘‘ஏன் லட்சுமி, இந்த வயசான காலத்துல நீயும் வீட்டுக்காரரும் தனியா இருந்து கஷ்டப்படுறீங்க? உன் மூணு பிள்ளைகளும் வெளியூர்ல வசதியாத்தானே இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர் வீட்ல போய் இருக்கலாம்ல. உன் பிள்ளைகளுக்கு உங்களைக் கூட வெச்சு கவனிச்சுக்க மனசுல இல்லையா?’’ - அக்கறையாய் கேட்டாள் ராஜம்.

‘‘அதெல்லாம் இல்லை ராஜம். எங்ககூட வந்து இருங்கன்னு மூணு பிள்ளைகளும் எங்களைக் கூப்பிட்டுட்டுத்தான் இருக்காங்க. மூத்த பிள்ளை பெங்களூருல இருக்கான். ரெண்டாவது பிள்ளை சென்னையில. மூணாவது பிள்ளை மும்பையில. ஒரு பிள்ளை வீட்ல போய் இருந்தா, மத்த ரெண்டு பிள்ளைகளும், நாங்க அங்கே போகலையேன்னு வருத்தப்படுறாங்க’’ என்றாள் லட்சுமி.

‘‘ஒவ்வொரு பிள்ளை வீட்டு லயும் ரெண்டு மூணு மாசம்னு மாத்தி மாத்தி இருக்கலாமே. எல்லா பிள்ளைகளும் சந்தோஷப் படுவாங்களே’’

‘‘ஒவ்வொரு பிள்ளையும் தனித்தனியா சந்தோஷப்பட்டா போதுமா ராஜம்? ஒத்துமையா சந்தோஷமா இருக்க வேண் டாமா?’’

அவள் சொல்வது புரியாமல், புருவத்தைச் சுருக்கினாள் ராஜம்.

‘‘ராஜம்! இப்போ எங்க கையும் காலும் நல்லாத்தானே இருக்கு. சொந்தத்துக்கு சொந்தமா அக்கம் பக்கத்துல நீங்க எல்லாரும் இருக்கீங்க. தீபாவளி, பொங் கல்னு ஒரு விசேஷம் வரு துன்னு வெச்சுக்கோ. நாங்க ஒரு பிள்ளை வீட்டுக்குப் போனா, மற்ற பிள்ளைங்க அங்கே வருவாங்களா? ஏதேதோ காரணம் சொல்லி தவிர்த்துடு வாங்க. ஆனா இப்போ ஒரு பண்டிகை விசேஷம்னா எங் களைப் பார்க்குறதுக்கு மூணு பிள்ளைகளும் குடும்பத்தோட இங்கே வந்துடறாங்க. ஏன்னா இது பொதுவீடு. எல்லாருக்கும் உரிமை இருக்கு. வருஷம் பூராவும் எங்கெங்கோ தனித் தனியா இருக்கிற பிள்ளைங்க விசேஷம், பண்டிகை நாட்கள்ல மட்டுமாவது ஒண்ணா ஒத்துமையா கொண்டாடணும்னா நாங்க இங்கே தனியா இருக்கிறதுதான் சரி’’

பிள்ளைகளின் ஒற்றுமைக் காக, தனிமையையும் பொருட் படுத்தாமல் அவர்கள் காலம் தள்ளுவதை அறிந்து நெகிழ்ந்தாள் ராஜம்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்