சிலர் தங்களது வாகனங்களுக்கு விருப்பமான ஃபேன்ஸி எண்களை எவ்வளவு பணம் செலுத்தி யேனும் வாங்குகின்றனர். ஃபேன்ஸி எண்களைப் பெறும் முறை குறித்து ஈரோடு மண்டல துணைப் போக்குவரத்து ஆணையர் எஸ்.வேலுசாமி விளக்கம் அளிக்கிறார்.
# எதன் அடிப்படையில் வாகனங்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன?
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தையும் அடையாளப்படுத்தும் வார்த்தைகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. உதாரணமாக தமிழகப் பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களிலும் ஆங்கிலத்தில் TN என எழுதப்பட்டிருக்கும். TN என்பது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதுபோல, கேரளத்துக்கு KL, கர்நாடகத்துக்கு KA, புதுச்சேரிக்கு PY என ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே ஆங்கில எழுத்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து வரும் 2 எண்கள், அதாவது TN என்ற எழுத்தைத் தொடர்ந்து வரும் 01, 02, 30, 88 என்பன போன்ற எண்கள் மாநில அரசால் ஒதுக்கப்படுகின்றன. இந்த எண்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைக் குறிக்கும் எண்களாகும். அதற்கு அடுத்து வரும் நான்கு இலக்க எண்கள் 1 முதல் 9999 வரை வரிசைப்படி வாகனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த எண்கள் முடிந்த பின் A என, அகர வரிசைப்படி மீண்டும் 1 முதல் 9999 எண் வரை வரிசைப்படி ஒதுக்கப்படும். அடுத்து B, C, D, E... என அடுத்தடுத்து செல்லும்.
# வரிசைப்படி எண்கள் ஒதுக்கப்படும்போது, தானாகவே ஃபேன்ஸி எண் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறதா?
1 முதல் 9999 வரை 1111, 2222 என்பது போல மொத்தம் 98 எண்கள் ஃபேன்ஸி எண்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரிசைப்படி எண் ஒதுக்கப்படும்போது, இந்த எண்கள் கிடைக்காது. அரசின் வருவாய் கருதி, அந்த எண்கள் யாருக்கும் இலவசமாக வழங்கப்படுவதில்லை.
ஃபேன்ஸி எண் வேண்டுவோர் சென்னை தலைமைச் செயலக உள்துறை (போக்குவரத்து) அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட எண் வேண்டும் என்று உத்தரவு பெற்று வரவேண்டும். அவ்வாறு பெற்று வந்தால் ஃபேன்ஸி எண் வழங்கப்படும்.
# ஃபேன்ஸி எண் வழங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுமதி உள்ளதா?
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆயிரம் வரை உள்ள நடப்பு எண் வாகனங்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக ஒரு நாளைக்கு 500 வாகனங்களுக்கு மட்டும் எண்கள் வழங்கப்பட்டால். மறுநாள் 500-ல் இருந்து ஆயிரம் எண்கள் வரை வாகனங்களுக்கு வழங்கலாம். அதில் உள்ள ஃபேன்ஸி எண்களை வாகனங்களுக்கு வழங்குவதற்கும் கட்டணம் உள்ளது. அந்த எண்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒதுக்க அனுமதி உள்ளது.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
20 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago