இஸாவோ தகஹாடா 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

ஜப்பானிய திரைப்பட இயக்குநர்

ஜப்பானிய இயக்குநர், அனிமேட்டர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறன் கொண்ட இஸாவோ தகஹாடா (Isao Takahata) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஜப்பானில் உஜியாமாடா நகரில் மி பெரிஃபெக்சர் என்ற இடத்தில் பிறந்தார் (1935). ஓகயாமா நகரில் அமெரிக்கா நடத்திய பெரிய வான்வெளித் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பிரெஞ்ச் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பிரெஞ்ச் அனிமேஷன் கார்ட்டூன் படத்தைப் பார்த்துக் கவரப்பட்டார்.

l தான் படித்த பல்கலைக்கழகத்தில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு அனிமேஷன் நிறுவனத்துக்கு உதவி இயக்குநர் தேவை என்பதைத் தெரிந்துகொண்டு அதில் சேரும் ஆசையால் நுழைவுத் தேர்வு எழுதினார். அதில் தேர்வுபெற்று வேலைக்குச் சேர்ந்தார்.

l ஒரு வழியாக இவருக்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஹோல்ஸ்: பிரின்ஸ் ஆஃப் தி சன்’ என்ற தனது முதல் படத்தை இயக்கினார். இது வர்த்தக ரீதியில் தோல்விப் படம். படம் தோல்வி அடைந்ததால் இவர் பதவி இறக்கம் செய்யப்பட்டார். தான் வேலை பார்த்த நிறுவனத்தில் மியசாகியைச் சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

l இணைந்து பணியாற்றும் திட்டத்தோடு 1971-ல் இருவரும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்கள். 1985-ல் அனிமேஷன் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிபிலியைத் தொடங்கினார்கள். இருவரும் பல படங்களை எடுத்தார்கள். இந்த நிறுவனத்தின் முதல் படம் ‘கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃபைய்ஸ்’.

l இந்தப் படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. மிகவும் பிரபலமான திரை விமர்சகர் ரோஜர் எபர்ட், ‘இதுவரை தயாரிக்கப்பட்ட போர் குறித்த தலைசிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று’ எனப் பாராட்டினார். தொடர்ந்து ‘ஆனி ஆஃப் கிரீன் காபில்ஸ்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார் தகஹாடா.

l இத்தாலிய நியோரியலிச வகைப் படங்கள் இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. மற்ற அனிமேஷன் படங்களிலிருந்து இவரது படங்கள் வேறுபட்டிருந்தன. பெரும்பாலான அனிமேஷன் இயக்குநர்களைப் போல இவர் படம் வரைவதில்லை. ‘இசையும், வாசிப்பும் இவரது பொழுதுபோக்குகள்’ என்று இவரது நண்பர் குறிப்பிட்டுள்ளார்.

l ஒரு முழுமையான இயக்குநராக மாறுவதற்கு முன்பாக ஒரு அனிமேட்டராக இவர் பணியாற்றவில்லை. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்தார். இவரது படைப்புகள் பெரும்பாலும் யதார்த்தச் சூழல்களில் தயாரிக்கப்பட்டவை.

l ‘ஓமோஹைட் போரோ போரோ’ என்ற திரைப்படம் இவரது மற்ற திரைப்படங்களைவிட அதிகம் பாராட்டுகளைப் பெற்றது. ஆங்கிலம் பேசும் ரசிகர்களுக்காக இது ‘ஒன்லி யெஸ்டர்டே’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ‘பாண்டா கோ பாண்டா’, ‘காஸ்டில் இன் தி ஸ்கை’, ‘கிக்கிஸ் டெலிவரி சர்வீஸ்’, ‘மை நெய்பர்ஸ் யமன்டாஸ்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரசித்தம்.

l பல படங்களுக்குத் திரைக்கதையையும் எழுதியுள்ளார். இசை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். ஆனிசி சர்வதேச அனிமேஷன் திரைப்பட விருதுகள் விழா, சிகாகோ சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழா உள்ளிட்ட பல அமைப்புகளிடமிருந்து சிறந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கான விருதுகள் பெற்றார்.

l 2007-ல் கோபெ அனிமேஷன் விருதுகள் விழாவில் சிறப்பு விருது பெற்றார். 2015-ல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இவரது திரைப்படம் இடம்பெற்றது. இஸாவோ தகஹாடா தற்போதும் திரைப்பட பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்