நெட்டிசன் நோட்ஸ்: மருத்துவர் சாந்தா மறைவு - புற்று நோய் பாதித்த பல ஏழைகளின் அன்பின் அடையாறு

By செய்திப்பிரிவு

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் சாந்தா(93), உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலையில் காலமானார்.

மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில் ,

.R.Thirunavukkarasu .

இன்று காலமான சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமணை தலைவர் மருத்துவர். மேன்மைக்குறிய சாந்தா அம்மையார் அவர்களுக்கு நமது இந்தியநாட்டின் மிகவும் உயரிய விருதான "பாரதரத்னா" விருதினை வழங்கி கௌரவபடுத்தவேண்டும்.
இதற்காக தமிழ்நாடுஅரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும்.

Raja Shanmugasundaram - தன்னரசு நாட்டுக்காரன்

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது

Dr Kaliyaperumal R

மருத்துவத் துறையில் 65 ஆண்டு காலம் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தனது வாழ்க்கைய அற்பணித்த மருத்துவர் சாந்தா அவர்களின் இறப்பு ஈடுசெய்ய முடியாத இறப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thalaivar Darbarᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ

புற்று நோயாளிகளுக்காக கடைசிவரை பாடுபட்ட மகத்தான மருத்துவர் சாந்தா மறைவு. ஆழ்ந்த அஞ்சலி

ச.கருணாநிதி

புற்றுநோய்த்துறையில் மகத்தான மருத்துவ பணியை ஆற்றிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர்.சாந்தா அவர்களுக்கு அஞ்சலி.

Prem Singh

மருத்துவ உலகில் மண்ணின் கண்மணியாய் கொடிய நோயை விரட்டும் சிம்ம சொப்பனமாய் கொடிய *நோயால்
சிக்கித்தவிக்கும் நோயாளிக்கு பரிவு காட்டும் சாந்தமாய்* மருத்துவர் சாந்தா அவர்கள் காலம் சென்றது கலங்க செய்கிறது

Shajan

மருத்துவர் சாந்தா என்ற பெயர் சாதாரணப் பெயர் அல்ல

புற்று நோய் உலகில் தன்னம்பிக்கை தந்த சரித்திரப் பெயர் !

வாழும் நாளில் சாகும் நாள் தெரிந்து நரகத்தில் வாழ்ந்த பலரை வாழ்க்கை நகர வீதியில் உலாவ வைத்த சாவித்திரி !!

புற்று நோய் பாதித்த பல ஏழைகளின் அன்பின் அடையாறு!!!

Veera Pandiyan

தன் வாழ்நாள் முழுவதும் புற்றுநோய்யை ஒழிக்க அயராது உழைத்த மருத்துவர். சாந்தா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

Muthuraman K

தன்னலமில்லாத சேவை மருத்துவர் சாந்தா அவர்கள் மறைவு மருத்துவத்துறைக்கு பெரும் இழப்பு.

Joe Vignesh

எழுச்சியூட்டும் வகையில் எளிமையான முறையில் மற்றும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சென்றுள்ளார் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் சாந்தா.

Jayaprakash

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் தாயுள்ளம் கொண்ட சாந்தா
இறைவனடி சேர்ந்தார்...

ஆழ்ந்த இரங்கல்கள்.

அண்ணாவின் விதை

பெண்கள் என்றால் வலிமை குன்றியவர்கள் என்கிற சமுதாயத்தில், வெறும் இயலாமையும் முட்டாள்தனமும் மலிந்து இருக்கிற மனிதர்கள் மத்தியில் ஒரு சகாப்தமாக தியாக வாழ்வு வாழ்ந்து மறைந்து இருக்கிறார் மருத்துவர் சாந்தா அம்மையார் அவர்கள்.
உங்கள் சேவை என்றும் இந்த மண்ணில் நினைக்கப்பட வேண்டும்.

Dr. A. K. Manivannan

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா(93) காலமானார். ஏழைகளுக்கும் தரமான புற்று நோய் சிகிச்சை அளித்தவர். எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Abdul Azeez S.A.

ஆழ்ந்த இரங்கல்.....!

சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறக்க முடியாது. சாந்தாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்