இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியப் படைப்பாளி கின்ட்டர் கிராஸ் (Gunter Grass) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l போலந்தின் டான்சிக் நகரில் (1927) பிறந்தார். வீட்டின் ஒரு பகுதியில் பெற்றோர் மளிகைக் கடை நடத்தி வந்தனர். மதப்பற்று மிக்க குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில், தேவாலயத்தில் பாதிரியாருக்கு உதவிகள் செய்து வந்தார்.
l பள்ளிப் படிப்பு முடித்ததும் 16 வயதில் விமானப் படையில் சேர்ந்தார். 17 வயதில் ஜெர்மனி நாஜிப் படையின் நீர்மூழ்கி சேவையில் சேர முன்வந்தார். வயது குறைவு என்பதால், கடற்படை மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக 1944-ல் வாஃபன்-எஸ்.எஸ். பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
l நேசப்படைகளிடம் 1945-ல் ஜெர்மனி தோற்றபோது அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டார். போர்க் கைதியாக இருந்தபோது, ஒரு சுரங்கத்தில் வேலை செய்த இவருக்கு சிற்பக் கலை கற்றுத்தரப்பட்டது.
l விடுதலையானதும், எழுதுவதில் ஆர்வம் பிறந்தது. 1950-களில் எழுதத் தொடங்கினார். நிறையப் பயணங்களை மேற்கொண்டார். 1953-ல் மேற்கு பெர்லின் சென்று குடியேறினார். பெர்லின் கலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1959-ல் வெளிவந்த ‘தி டின் டிரம்’ என்ற முதல் நாவல், இவரை ஜெர்மனியின் முன்னணி எழுத்தாளராக உயர்த்தியது.
l சிறந்த படைப்பாக கருதப்படும் ‘தி டின் டிரம்’ (1959), ‘கேட் அண்ட் மவுஸ்’ (1961), ’டாக் இயர்ஸ்’ (1963) ஆகிய 3 நாவல்களும் ‘டான்சிக் ட்ரைலாஜி’ எனப்படுகின்றன. நாஜிக்களின் எழுச்சி, 2-ம் உலகப்போர் ஆகியவற்றால் டான்சிக் நகரில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து இதில் விளக்கியுள்ளார். 1979-ல் வெளிவந்த ‘தி டின் டிரம்’ திரைப்படம், சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
l கிராமியக் கதைகளின் அடிப்படையில் 1977-ல் ‘தி ஃபிளவுன்டர்’ நாவல் வெளிவந்தது. 1999-ல் வெளிவந்த ‘மை செஞ்சுரி’ நாவல் 20-ம் நூற்றாண்டின் கொடூரமான வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது.
l தனித்துவம் வாய்ந்த படைப்பாளி, மிகவும் அசலான, பன்முகத் திறன் கொண்ட எழுத்தாளர் எனப் போற்றப்பட்டார். பெர்லின் சுவர் எழுப்பப்பட்டபோது வெளிப்படையாக அதை எதிர்த்தார். பெர்லின் கலை அகாடமி தலைவராக 1983 முதல் 1986 வரை பதவி வகித்தார்.
l ‘பீலிங் தி ஆனியன்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையின் முதல் தொகுதியை 2006-ல் வெளியிட்டார். 1980-களில் அமைதி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இந்தியா வந்த இவர் கொல்கத்தாவில் 6 மாத காலம் தங்கியிருந்தார்.
l இவரது கவிதைகள், இவரது அரசியல் கருத்துக்களின் வெளிப்பாடாகவே இருந்தன. ‘வாட் மஸ்ட் பீ ஸெட்’ என்ற இவரது கவிதை பல ஐரோப்பிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. இவர் சிறந்த நாடக ஆசிரியரும்கூட.
l இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1999-ல் வென்றார். ஜார்ஜ் பச்னர், ஹெர்மன் கெஸ்டென் உள்ளிட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார். எழுத்தாளர், ஓவியர், சிற்பி, நாடக ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த கின்ட்டர் கிராஸ் 88-வது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago