தேசபக்தர், சமூக சேவகர், படைப்பாளி, பத்திரிகையாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டவரும், ‘ஒடிசாவின் மாணிக்கம்’ (உத்கல மணி) என்று போற்றப்படுபவருமான கோபபந்து தாஸ் (Gopabandhu Das) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஒடிசா மாநிலம் பூரி அருகே உள்ள சுவாண்டோ கிராமத்தில் (1877) பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார். 12 வயதிலேயே திரு மணம் செய்துவைக்கப்பட்டது. அதன் பிறகும், படிப்பைத் தொடர்ந்தார்.
l அப்பகுதியில் காலரா நோய் பரவியபோது அரசின் நிவாரணப் பணிகள் மந்த கதியில் நடப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார். ‘பூரி சேவா சமிதி’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி சேவையாற்றினார். இது பின்னாளில் காலரா நோய்க்கான சிறப்பு மருத்துவமனையாக மாறியது.
l பட்டப்படிப்பு முடித்த பிறகு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். வழக்கறிஞர் தொழில் செய்தபடியே, அரசியலிலும் ஈடுபட்டார். சுதேசி இயக்கத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டார். 1917-ல் பிஹார் மற்றும் ஒடிசா சட்டசபை கவுன்சில் உறுப்பினரானார். காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழை யாமை இயக்கத்தில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார்.
l ‘நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த சாதனமாக அமையும். தேசத்தின் இளைஞர்கள் சுய சார்புடன், சுய சிந்தனை மிக்கவர் களாக, தியாகம் செய்ய முன்வருபவர்களாக, தேசத்தின் பிரச்சி னைகள் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்’ என்பார். இளைஞர்களிடம் தேசியத்தையும், தேசபக்தியையும் வளர்த்தார்.
l மக்களின் அறிவை வளர்க்க ‘சமாஜ்’ என்ற நாளிதழைத் தொடங்கினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை கடமையாகக் கருதி செயலாற்றினார். சமூக வளர்ச்சியைத் தடுக்கும் ஜாதி வேற்றுமை, தீண்டாமை, சோம்பலை நீக்கப் பாடுபட்டார்.
l அதிக புலமை, கல்வி அறிவு, தொழில் திறமை கொண்டவர் என்றபோதிலும், இவர் ஒருபோதும் பணத்தைத் தேடி ஓடியதில்லை. புயல், வெள்ளம், பஞ்சம் ஆகிய இயற்கைச் சீற்றங்கள், கல்வியறிவு இன்மை, வறுமை, நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அயராமல் பாடுபட்டார்.
l லாலா லஜ்பத்ராய் தொடங்கிய லோக சேவா சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டவர், தன் சொத்துகள் அனைத்தையும் இந்த சங்கத்துக்கே வழங்கினார்.
l சிறந்த எழுத்தாளர், கவிஞராகவும் விளங்கியவர். ஒரிய இலக்கியத் துக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. ‘பந்தீர் ஆத்மகதா’, ‘அவகாஷ் சிந்தா’, ‘காரா கவிதா’, ‘நசிகேத் உபாக்யான்’ ஆகிய படைப்புகள் புகழ்பெற்றவை.
l ‘குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்வியால் பயனில்லை. நாடு முன்னேற தொழிற்கல்வியே முக்கியம்’ என்று வலியுறுத்தினார். பூரிக்கு அருகே இயற்கை எழில் மிகுந்த இடத்தில் ‘சத்தியவதி வன வித்யாலயா’ என்ற கல்வி நிறுவனத்தை 1909-ல் தொடங்கினார். தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை முன்னோடியாகக் கொண்டு இது தொடங்கப்பட்டது. இங்கு பாடம் கற்பிக்கும் முறையில் பல புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டன.
l மனித குலத்தின் நல்வாழ்வுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித் தவர். உத்கலமணி (ஒடிசாவின் மாணிக்கம்), கர்மயோகி, இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம் என்றெல்லாம் போற்றப்படும் கோபபந்து தாஸ் 51-வது வயதில் (1928) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago