கோபிநாத் கவிராஜ் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

சமஸ்கிருத அறிஞரும் தத்துவஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜ் (Gopinath Kaviraj) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

l வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் (1887) பிறந்தார். தத்துவஞானியான தந்தை, இவர் பிறக்கும் முன்பே இறந்துவிட்டார். சிறு வயதிலேயே தாயையும் இழந்த இவர், மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.

l சொந்த கிராமத்திலும், பிறகு தாக்காவிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயது முதலே சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்தவர், ஜெய்ப்பூர் மஹாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். நூலகங்களுக்குச் சென்று ஏராளமான புத்தகங்களைப் படித்தார்.

l வாரணாசியில் உள்ள அரசு சமஸ்கிருதக் கல்லூரியின் ஒரு அங்கமான ‘சரஸ்வதி பவன்’ நூலகத்தின் தலைவராகப் பணியாற்றினார். நூலகத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார்.

l இந்து மதத்தின் ‘தந்த்ர’ வழிபாட்டு முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்து, பல்வேறு தாந்த்ரீக அம்சங்கள் பற்றி அறிந்தார். காசியில் 1918-ல் விஷுத்தானந்த பரமஹம்சா என்ற யோகியை சந்தித்து அவரை குருவாக ஏற்றார். அவரிடம் யோகம், தாந்த்ரீகம் கற்றார்.

l யோகியாக, தாந்த்ரீக ஞானியாக விளங்கிய இவர், படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார். ‘விஷுத்த வாணி’, ‘அகண்ட மஹாயோக்’, ‘பாரதிய சன்ஸ்க்ருதி கீ சாதனா’, ‘தாந்த்ரிக் சாஹித்ய’ உட்பட பல நூல்களைப் படைத்தார்.

l சமஸ்கிருதக் கல்லூரி முதல்வராக 1924-ல் நியமிக்கப்பட்டார். ‘சரஸ்வதி பாவனா கிரந்தமாலா’ என்ற பெயரில் வெளிவந்த பாடப் புத்தகங்களின் முதன்மை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். தந்த்ரா பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடரவும், ஆன்மிக சுயதேடலின் பாதையில் பயணிக்க விரும்பியதாலும் அப்பதவியில் இருந்து 1937-ல் விலகினார். அறிவு, ஆன்மிகம் குறித்த விவாதங்கள், தாந்த்ரீகப் பயிற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

l பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1934-ல் ‘மகாமகோபாத்தியாய’ விருது வழங்கி சிறப்பித்தது. பத்ம விபூஷண், சாகித்ய வாசஸ்பதி, தேஷிகோத்தம், சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

l வாரணாசி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட யோக-தாந்த்ரா துறைத் தலைவராக பணியாற்றினார். குருவின் மறைவுக்குப் பிறகு வாரணாசியில் உள்ள அவரது ஆசிரமத்தை நடத்தினார். புண்ணியத் தலமான காசியை மிகவும் நேசித்த இவர், இறுதி வரை அங்கேயே இருந்தார்.

l வேதம், பண்டைய இந்திய வரலாறு, புராணங்கள், இந்திய - ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சாஸ்திரங்கள் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருந்த கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தார்.

l தத்துவங்கள், மதங்கள் தொடர்பான 1,500 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தார். புத்தக அறிவு போதாது, அது சுய அறிதலோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுவார். தலைசிறந்த தத்துவஞானியான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 89-ம் வயதில் (1976) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்