‘வைட்டமின் சி’-யை கண்டுபிடித்தவரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஹங்கேரி ஆராய்ச்சியாளருமான ஆல்பர்ட் ஸென்ட் ஜர்ஜி (Albert Szent Gyorgyi) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் (1893) பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தன் மாமாவின் ஆய்வுக்கூடத்தில் பணிபுரிந்தார். முதல் உலகப்போரின்போது இத்தாலி, ரஷ்ய போர்க் களங்களில் பங்கேற்றார். காயம் பட்டதால் 1917-ல் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
l புடாபெஸ்ட்டில் மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். ஒரு மருந்தியலாளரிடம் பணிபுரிந்தார். 1920 முதல் 1926 வரை பல அறிவியல் அமைப்புகளில் பணியாற்றினார். 1927-ல் ராக்ஃபெல்லர் ஃபெல்லோவாக கேம்பிரிட்ஜ் சென்றார். 1928 முதல் 1933 வரை பல்வேறு ஆய்வுக் குழுக்களுடன் இணைந்து பணிபுரிந்தார். தனிப்பட்ட முறையிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
l மீண்டும் கேம்பிரிட்ஜ் திரும்பினார். ஸெஜ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல், கரிம வேதியியல் துறைத் தலைவராகவும், பின்னர் புடாபெஸ்ட்டில் மருத்துவ வேதியியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். உயிரணு ஆற்றல் பரிமாற்றம், உயிரணு சுவாசம் குறித்து ஆராய்ந்தார்.
l ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் சார்புத்தன்மை குறித்து விளக்கினார். இது உயிரினங்களின் உயிரணுக்களில் நிகழும் வளர்சிதை மாற்றத் தாக்கங்கள், செயல்முறைகள் பற்றியது.
l சிறுநீரக சுரப்பிகளில் இருந்து எல்.அஸ்கார்பிக் அமிலம் அல்லது வைட்டமின் சி-யை பிரித்தெடுத்தார். வைட்டமின் சி மற்றும் ஃப்யூமரிக் அமிலத்தின் வினைவேக மாற்றத்துடன் கூடிய வினைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
l செல்கள், வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1937-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சிட்ரிக் அமிலத்தின் சுழற்சி, பல கூறுகள், பிரதிபலிப்புகள் குறித்தும் கண்டறிந்தார். உயிரியல் ஆக்சிஜனேற்றம் குறித்து தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டார்.
l ஹங்கேரியில் இருந்து 1947-ல் வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். மசாசூசெட்ஸில் உட்ஸ்ஹோல் என்ற இடத்தில் தசை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநராகப் பதவி ஏற்றார். தசைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வைத் தொடங்கினார். இந்த ஆராய்ச்சி முடிவுகள், அடுத்தடுத்து பல ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்தன.
l புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் இவருக்கு 1950-களில் ஆர்வம் ஏற்பட்டது. குவான்டம் இயக்கவியல் கோட்பாடுகளை புற்றுநோய் உயிர் வேதியியலுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆராயத் தொடங்கினார். நிதிப்பற்றாக்குறை காரணமாக அந்த ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை.
l பல அறிவியல் சங்கங்களில் உறுப்பினராக இருந்துள்ளார். புடாபெஸ்ட் அறிவியல் அகாடமியின் தலைவராகவும், புடாபெஸ்ட் தேசிய அகாடமியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
l கேமரான் பரிசு, லாஸ்கல் விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார். இறுதிவரை மனிதகுல நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஆல்பர்ட் ஸென்ட் ஜர்ஜி 93-வது வயதில் (1986) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago