கவிஞர், அரசியல்வாதி, பத்திரிகையாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட ஸ்ரீகாந்த் வர்மா (Shrikant Verma) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 18). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
l மத்தியப்பிரதேசம் (சத்தீஸ்கர்) பிலாஸ்பூரில் பிறந்தார் (1931). தந்தை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். ஆரம்பக் கல்வி பயில சொந்த ஊரில் உள்ள ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்குள்ள சூழல் இவருக்குப் பிடிக்கவில்லை என்பதால், நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
l அலகாபாத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வீட்டு நினைவு வாட்டியதால் மீண்டும் பிலாஸ்பூருக்கே திரும்பிவிட்டார். அதே ஊரில் பி.ஏ. பட்டம் பெற் றார். பின்னர் தொலைதூரக் கல்வி மூலம் நாகபுரி பல்கலைக் கழகத்தில் இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
l தந்தை வழக்கறிஞர் தொழில் செய்து, குடும்பம் ஓரளவு வசதியாக இருந்தாலும், படித்து முடித்த இவருக்கு நீண்ட காலம் வேலை கிடைக்காமல் இருந்தது. எனவே பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1954-ல் கஜானந்த் மாதவ் முக்திபோத் என்ற பிரபல இந்தி எழுத்தாளரை சந்தித்தார்.
l அவர் தந்த ஊக்கத்தால் ‘நயீ திஷா’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். நரேஷ் மேத்தா என்பவருடன் சேர்ந்து 1956-ல் ‘க்ருதி’ என்ற பிரபல இலக்கிய பத்திரிகையை டெல்லியிலிருந்து வெளியிட்டு வந்தார். அதன் பிறகு டெல்லியில் பல்வேறு பத்திரிகைகளில் ஏறக்குறைய பத்தாண்டு காலம் பணிபுரிந்தார்.
l காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1956 முதல் 1963 வரை இவ ருக்குப் போராட்டகாலமாகவே இருந்து வந்தது. 1964-ல் ராய்ப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரான மினி மாதாவின் அழைப்பின் பேரில் ‘சர்காரி ஆவாஸ்’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்தார்.
1966 முதல் 1977 வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தின் வெளியீடான ‘தின்மான்’ என்ற இதழின் சிறப்பு நிருபராகப் பணியாற்றினார். அரசியலில் தீவிரமாக பங்கேற்றதால் பத்திரிகைப் பணியைத் தொடர முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
l l 1969-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக இருந்தார். 1976-ல் காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-ல் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.
l காங்கிரஸ் கட்சிக்கு ‘கரீபி ஹடாவோ (ஏழ்மையை ஒழிப்போம்)’ என்ற கோஷத்தை தந்தவர். 50களில் நவீன கவிதை இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். ‘பட்கா மேக்’, ‘மாயாதர்ப்பண்’ மற்றும் ‘தினாரம்ப்’ ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க காவியங்கள்.
l ‘ஜாடியா ததா சம்வாத்’ என்பது இவரது சிறுகதைத் தொகுப்பு. ‘பீஸ்வி சதாப்தி கே அந்தேரே மே’ என்பது இவரது விமர்சன நூல். ‘தூஸ்ரி பார்’ என்ற நாவல் 1968-ல் வெளிவந்தது. இவரது பயணக் கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. இவருக்கு துளசி விருது, ஆசார்ய நந்ததுலாரே வாஜ்பேயி விருது, ஷிகர் சம்மான், குமார் ஆஷான் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.
l இவரது ‘மகத்’ என்ற கவிதை தொகுப்பு நூலுக்காக மரணத்துக்குப் பிறகு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. கவிஞர், கதாசிரியர், விமர்சகர், பத்திரிகையாளர், அரசியல்வாதி என பல்வேறு களங்களில் செயல்பட்ட ஸ்ரீகாந்த் வர்மா 1986-ல், 55-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago