சுற்றுச்சுவரைத் தாண்டிப் போய் விழுந்த தோனியின் சிக்ஸ்: என்ன டைமிங்...பேட்ஸ்விங் என முரளி விஜய் ஆச்சரியம்

By இரா.முத்துக்குமார்

ஐபிஎல் பில்ட்-அப் தொடங்கி விட்டது, வீரர்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்பதை விட ஒவ்வொருவரும் ஒவ்வொரு வணிக பிராண்ட்கள். அதுவும் நட்சத்திர வீரர்கள் என்றால் கேட்க வேண்டாம்.

போட்டியில் அல்ல வலைப்பயிற்சியிலும் கூட சிங்கிள் எடுத்தாலும் சூப்பர் தான், சிக்சர் அடித்தால் கேட்கவே வேண்டாம். ஏற்கெனவே ரோஹித் சர்மா அடித்த சிக்ஸ் மைதானத்துக்கு வெளியே சென்ற பேருந்தைத் தாக்கியது என்று மும்பை இந்தியன்ஸ் வீடியோ வெளியிட்டு விளம்பரப்படுத்த, இப்போது தோனியின் பயிற்சி ஆட்ட சிக்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வைரல் விவகாரம் விரைவில் எது புரமோஷன் வீடியோ, எது உண்மையான வீடியோ என்பதற்கான இடைவெளியையே காலி செய்து விடும் போல்தான் தெரிகிறது. வலைப்பயிற்சியில் அடிக்கும் சிக்ஸர்களும் கிரிக்கெட்டைத் தாண்டிய இப்படிப்பட்ட விஷயமாகி வருகிறது.

ஆனால் எப்போது வேண்டுமானாலும் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற தோனியின் திறமை இன்னமும் அப்படியே உள்ளது என்பதுதான் இதில் உள்ள பியூட்டி. துபாயில் அவர் வலைப்பயிற்சியில் அடித்த சிக்ஸ் மைதான சுற்றுச்சுவரைத் தாண்டிப் போய் விழுந்தது.

’தல’ தோனி அடித்த சிக்ஸ் வீடியோவை சென்னை அணி தன் ட்விட்டரில் வெளியிட்டது. பந்து லாங் ஆனில் நின்று கொண்டிருந்த முரளி விஜய் தலைக்கு மேல் சென்றது. சிஎஸ்கே அணி மேலாளர் ரஸல் ராதாகிருஷ்ணன் ‘பந்து காணாமல் போய்விட்டதா?’ என்றார்.

முரளி விஜய் அருமையான டைமிங், என்ன பேட்ஸ்விங் என்று அந்த ஷாட்டுக்கு புகழாரம் சூட்டினார்.

சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

13 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்