யூடியூப் பகிர்வு: புலி ட்ரெய்லரின் புதிய ரீமிக்ஸ் அவதாரம்

By கார்த்திக் கிருஷ்ணா

தொடர்ச்சியாக பல பாடல் மற்றும் ட்ரெய்லர்களின் வெவ்வேறு ரீமிக்ஸ் வடிவங்களை தொகுத்து அளித்து வரும் >ரீமிக்ஸ் மாமா-வின் அடுத்த படைப்பு, விஜய் நடிப்பில் வந்திருக்கும் 'புலி' படத்தின் ரீமிக்ஸ் ட்ரெய்லர். (இணைப்பு கீழே)

இம்முறை ரீமிக்ஸுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், ஹாலிவுட்டில் வசூல் சாதனை படைத்த 'அவதார்'. பெரும்பாலும் அவதார் படத்தின் இறுதி கட்ட காட்சிகளை வைத்தே தொகுக்கப்பட்டிருக்கும் இந்த ட்ரெய்லர், முதல் காட்சியிலிருந்தே தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைக்குப் அட்டகாசமாகப் பொருந்திப் போகிறது.

நாயகனுடன் அவதார் நேவிக்களும் இணைந்து சண்டையிடுவது, நாயகியுடன் பேசிச் சிரிப்பது, பாண்டோர கிரக உயிரினத்தின் மேல் சவாரி செய்வது, அங்கிருக்கும் மிருகங்கள் போரில் சண்டை போடுவது என ஓவ்வொரு நொடியுமே ’புலி’ படத்தின் ட்ரெய்லர் இசை மற்றும் சப்தங்களோடு கச்சிதமாக ஒத்துப்போவது ஆச்சரியமாக உள்ளது. கடைசியாக, விஜய் பேசும் பன்ச் டயலாக்கும் இந்த ரீமிக்ஸ் ட்ரெய்லரில் கூடுதல் சுவாரசியம்.

ஒரு வேளை 'புலி' ட்ரெய்லரை விட, இந்த ட்ரெய்லர் நன்றாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்