மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுத்து, பெற்றவர்களுக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்குத்தான் கொடுத்திருக்கிறோம். அன்பாசிரியராய் இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியே, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சில மாணவர்களும், நண்பர்களும் அவரிடம் போய், அவரது பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அப்போது அவர் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஆசிரியர்களைப் போற்றும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதனாலேயே அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
வழக்கம்போல, இணையவாசிகள், தங்களின் ஆசிரியர்களைப் பற்றி தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ட்விட்டரில் ஆசிரியர் என்னும் சொல், இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இணையப்பதிவர்களின் இதயத்தைத் தொடும் ஆசிரியர் தின சிறப்புப் பதிவுகளின் தொகுப்பு.
கே. என். சிவராமன்: என்றும் போல் இன்றும் ஹேமா டீச்சரை நினைத்துக் கொள்கிறேன். எனக்குப் பேசும்போது திக்கும். அறிமுகமில்லாதவர்கள் என்றால் சற்று கூடுதலாகவே. இப்போதே இப்படியென்றால், ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது எப்படியிருந்திருப்பேன்? அப்படியிருந்தவனுக்கு நம்பிக்கை கொடுத்து பேச்சுப் போட்டியில் பங்கேற்கச் செய்து மேடையில் ஏற்றியவர் அவர்தான்.
ஐந்து வயது பாலகனாக, கால்களும் கைகளும் நடுங்க, கன்னத்தில் வழியும் கண்ணீருடன் உதடுகள் கோண ஒவ்வொரு சொல்லையும் இழுத்து இழுத்து மேடையில் பேசியதும்... சக மாணவர்கள் எல்லாம் கைகொட்டி சிரித்ததும்... பின்னால் நின்று தலையை கோதியபடி இறுதி வரை என்னை பேச வைத்ததும் ஹேமா டீச்சர்தான். அந்த ஐந்து நிமிடங்களை எந்த நொடியிலும் என்னால் மறக்க இயலாது. நினைவின் உள்ளடுக்குகளில் பாதுகாப்பாக இருக்கும் பொக்கிஷம் அது.
கிருஷ்ண குமார்: மனதில் பட்டதை பேச எல்லோராலும் முடியும். ஆனால் எழுதவும், படிக்கவும் கற்றால் மட்டுமே முடியும். கற்றுக்கொடுத்த ஆசான்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
அருண் செல்வம்: அங்கேயே இருந்து, நம்மை மேலே ஏற்றி அழகு பார்க்கும் ஏணி, ஆசிரியர் மட்டுமே! #ஏற்றி விட்ட ஏணி.
ஆழ்வார்க்கடியான்: துரோகியையும், அவன் செய்த துரோகத்தையும் மறக்காதே.
ஏனெனில் அவன்தான் உனக்கு ஆசிரியர்
வந்தியதேவன்: நடப்பு வாழ்வில் நமக்கு பாடம் கற்றுத் தரும் ஒவ்வொரும் நமக்கு ஆசிரியர்தான்.
கோகுலா: எந்த ஆசிரியருக்கு வாழ்த்துச் சொல்லலாம்? நினைவில் எவரும் இல்லை, எல்லோரும் நன்கு படிக்கும் பையனின் பின்னாலேயே ஒளிந்திருந்தனர்.
சுந்தர் ராஜ்: 100 பேரு இருந்தாலும் ஒத்த ஆளா நின்னு சமாளிக்கும் திறமை நிஜவாழ்க்கையில் ஆசிரியருக்கு மட்டுமே இருக்கிறது!
கருத்து கணேசன்: உங்களால் இதை படிக்க முடிந்தால் உங்கள் ஆசிரியருக்கு நன்றி சொல்லுங்கள்
யாஸ்மீ: ஒரு வேலையை தனது வாழ்நாள் முழுதுமாக சலிப்பின்றி செய்யும் வரம் ஆசிரியர்களுக்கே வாய்க்கும்
ட்விட்டர் ரசிகன்: நாம் எண்ணவாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
சுதன். தம்பி: 'அ'னா, 'ஆ'வன்னா.! ஏ பி சி டி..!! வாய்ப்பாடு...!!! அனைத்திற்கும் அஸ்திவாரமே ஆசிரியர்கள் தான்.. #ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
சூரிய புத்திரன்: ஆச்சரியம்! ஆசிரியர்கள், ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்...! தன் மாணவர்களால். #ஆசிரியர் தின நினைவுகள்
மாரிராஜ் கோபால்: பெற்று எடுக்காத குழந்தைக்கு பெற்றோர்தான்ஆசிரியர்
ஹரிஹரன் ஷங்கர்: ஆசிரியர் பணியே சிறந்தது என்றார் அப்துல்"கலாம்"!
ஆசிரியர் பாதம் பணி நீயும் ஆகலாம் "கலாம்"!
ஆசிரியர் சொல்படி கேட்டால் வாழ்வில் சிறக்"கலாம்"!
ஆசிரியப்பணி செய்ய "கலாம்" மீண்டும் பிறக்"கலாம்"!
அம்பேத்கர் செளந்தர ராஜ்: மழையின் அருமை தெரியாமல் மழையை கண்டு ஓடுபவர்போல உங்களைக் கண்டு ஓடினோம் மழையின் அருமை கோடையில் தெரியும் உங்களின் அருமை, பெருமை இப்போது உணர்கிறேன் !.......
மிருணா: இப்பிறவியில் மேற்கொண்ட பணிக்காக எப்பிறவியிலும் பெருமை உமக்கு!
சுதன்.தம்பி: ஆசிரியர்களை அம்மா, ஐயா என்று அழைத்த கடைசி தலைமுறை நாம்தான்..!!
செளந்தர் ஸ்ரீனிவாசன்: அன்பை தருவது தாய், அறிவை தருவது தந்தை என்றால் இந்த இரண்டையும் ஒருசேரத்தரும் தாயுமானவர்.. ஆசிரியர் நீங்கள் அல்லவா!!!
அருள் பி ஜி: உங்கள் குழந்தைகளைப் படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள்! படிக்கின்ற ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள்!
தரைப்படைத் தளபதி: பள்ளி பருவங்களில் நமக்கு சாத்தானாகவும் இப்போது நினைக்கும்போது கடவுளாகவும் தெரிவது ஆசிரியர்கள் மட்டுமே... #HappyTeachersDay
வினோஷ்: என்னை உலகிற்கு அறிமுகம் செய்தது என் பெற்றோர்; உலகத்தை எனக்கு அறிமுகம் செய்தது என் ஆசிரியர்கள்
ஜீவா: இவனுக்குள்ளும் ஏதோ இருக்கு பாரேன்னு நம்பி படிக்க வைச்சவர் #ஆசிரியர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago