10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கடந்த மூன்று மாதங்களாக, ஆன்லைன் வகுப்புக்காக கம்ப்யூட்டரில் நான்கு மணி நேரம் படிப்பதாகவும், அதிலிருந்து தனக்குக் கண் வலி, கண் சிவத்தல், கண் மங்கலாக இருத்தல், கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொண்டிருத்தல், கண் உறுத்தல், தலைவலி, கழுத்துவலி போன்ற பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி கண் மருத்துவரைச் சந்தித்தான். அவருக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
'காலை முழுவதும் படிப்பு மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா' என்றார் பாரதி. ஆனால், நாள் முழுவதும் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது சற்று கவலைகொள்ள வேண்டியுள்ளது.
சமீபத்தில் உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற ஆய்வில் செல்போன், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை மூன்று மணி நேரத்துக்குப் பார்க்கும் குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை குறைபாடு, கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் போன்ற பாதிப்புகள் வரலாம்.
கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்றால் என்ன?
» ‘சொர்க்கம் மதுவிலே’, ‘ஆழக்கடலில் தேடிய முத்து’; கமலின் ‘சட்டம் என் கையில்’ வெளியாகி 42 ஆண்டுகள்!
செல்போன், கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்க்கும்போது கண்ணைச் சிமிட்டும் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் கண்ணில் நீர்ச்சத்துக் குறைந்து, மேற்கூறிய பிரச்சினைகள் உருவாவதுதான் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்.
குழந்தைகளின் கண் நலம் காக்க என்ன செய்ய வேண்டும்?
* ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் பங்கேற்கும்போது செல்போனில் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து, கம்ப்யூட்டரில் பார்க்க அறிவுறுத்த வேண்டும்.
* கம்ப்யூட்டரை மேஜையின் மீது வைத்து, குழந்தைகளின் முழங்கைக்கு இணையான உயரத்தில் கம்ப்யூட்டர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கம்ப்யூட்டர் ஸ்கிரீன் வெளிச்சத்தைப் பாதியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* கம்ப்யூட்டர் ஸ்கிரீனின் மீது எந்த வெளிச்சமும் நேரடியாகப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பட்டால் கண்ணில் கூச்சம் ஏற்பட்டு, தலைவலி உண்டாகும்
* கம்ப்யூட்டருக்கும் பார்ப்பவரின் கண்ணுக்கும் இடையே குறைந்தபட்சம் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.
* கம்ப்யூட்டரின் மையப் பகுதி கண்ணின் மையப் பகுதிக்கு 20 டிகிரி கீழே இருக்க வேண்டும்.
* படுக்கையில் படுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் .
* தொடர்ந்து 45 நிமிடங்கள் கம்ப்யூட்டரைப் பார்த்தால், 15 நிமிடங்கள் ஓய்வு தேவை.
* கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும். இதன்படி இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை இருபது அடி தூரத்தில் இருபது விநாடி பார்த்துப் பழக வேண்டும். ஜன்னல் வழியாக 20 அடி தூரத்தில் உள்ளவற்றைப் பார்க்கப் பழகிக் கொள்ளலாம். இதை மறக்காமல் இருக்க அலாரம் வைத்துக்கொள்ளலாம்.
* குழந்தைகள், பெரியவர்கள் தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்திற்குமுன் கம்ப்யூட்டர் பார்ப்பதைத் தவிர்க்கவும். இல்லை என்றால் தூக்கம் பாதிக்கப்படும்.
* 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.
* குளிர்சாதன அறையில் படிக்கும் குழந்தைகளின் கண்ணுக்கு நேராகக் குளிர்ந்த காற்றுபடும்போது, கண் உலர்ந்து போகலாம். குளிர்ந்த காற்று கண்ணில் படாதவாறு, அமர்ந்து படிக்க வேண்டும்.
* கம்ப்யூட்டரைத் தொடந்து பார்க்கும்போது, ஒரு நிமிடத்திற்கு 10- 15 முறை கண் சிமிட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். பழச்சாறு, மோர், பால் போன்ற திரவ உணவை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
* வைட்டமின் சத்துள்ள கீரை, கேரட், இனிப்புப் பூசணி போன்ற காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு உட்பட அனைத்து வகையான பழங்களை உட்கொள்ள வேண்டும்.
* வீட்டில் உணவு அருந்தும் அறையிலும் படுக்கை அறையிலும் கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* கம்ப்யூட்டர் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு வெளிப்புற விளையாட்டில் (Out Door games) ஈடுபடும் குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் மொட்டை மாடியில் விளையாடுவது, வீட்டின் அருகில் தனிமனித இடைவெளியுடன் சைக்கிள் ஓட்டுவது, எளிய உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடக் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
* செல்போனைத் தவிர்த்து வெளியே அதிகம் விளையாடும் குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு குறைவாகவே காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* ஆன்லைன் வகுப்பு, கம்ப்யூட்டரில் குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், முறையான கண் பரிசோதனைக்கு அழைத்து சென்று பார்வைக் குறைபாடு இருந்தால், கண்ணாடி போட வேண்டும்.
* ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை இருக்க வேண்டியது அவர்களுடைய பிறப்புரிமை. தடுத்துவிடக்கூடிய பார்வை இழப்பு, பார்வைக் குறைபாட்டைத் தடுத்து நல்ல பார்வை கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் செயல்படுவோம்.
கட்டுரையாளர்: டாக்டர் பெ. ரங்கநாதன்,
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago