மின் கட்டணத்தைக் குறைப்பது எப்படி?- உதவும் எளிய தொழில்நுட்பங்கள்

By நிஷா

மாத வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது வீட்டுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே நன்மையளிக்கும். தேவையைக் குறைக்காமல் அதே சமயம் மின் உபயோகத்தைக் கட்டுப்படுத்த சில எளிய தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

ஸ்மார்ட் பவர் ஸ்டிரிப்ஸ் (Smart Power Strips)

பல மின் உபகரணங்கள், நாம் அதை அணைத்தபின்னும் மின்சாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. டிவிடி பிளேயர், பிரிண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, கணினிகள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப், உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கின்றனவா என்பதை உணரும் தன்மைகொண்டவை. பயன்பாட்டில் இல்லை என்று தெரிந்தால், அதற்குச் செல்லும் மின்சாரத்தை முழுமையாக நிறுத்திவிடும். சில வகை ஸ்மார்ட் ஸ்ட்ரிப்கள், இன்னும் ஒருபடி மேலாக, தொலைக்காட்சிப் பெட்டி உபயோகத்திலில்லை என்பதை உணர்ந்தால், மின்சாரத்தை டிவிக்கு மட்டுமல்ல, டிவிடி பிளேயருக்கும் சேர்த்து நிறுத்திவிடும். இதன் விலை சுமார் இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். ஆனால், இது நம் மின் கட்டணத்தை 5% முதல் 10% வரை குறைக்கிறது.

ஆட்டோமேட்டிக் டோர் குளோசர் (automatic door closer)

மின்கட்டணத்தில் கணிசமான பங்கு ஏசி உபயோகத்துக்கானதுதான். ஏசி அறையின் கதவைச் சரியாக மூடவில்லையென்றால் மின் இழப்பு அதிகமாக இருக்கும். அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்தக் கதவு மூடும் விஷயம் பற்றிக் கேட்கவே வேண்டாம். வெறும் 200 ரூபாய் பெறுமானமுள்ள இந்தச் சாதனம் தானாக மூடி, இந்தப் பிரச்சினையை முற்றிலும் களையும். இதன் மூலம் 10% முதல் 20% வரை மின்கட்டணத்தைக் குறைக்கலாம்.

சூரியத் தகடுகள்

தண்ணீரைச் சூடாக்க, மின் உற்பத்திசெய்ய சூரிய ஒளியைப் பயன்படுத்துவதன் மூலம் கணிசமான அளவு மின்கட்டணத்தைக் குறைக்கலாம். சூரியனிலிருந்து வெப்ப ஆற்றலைப் பெற இரண்டு வகைத் தகடுகள் உள்ளன. ஒன்று குழாய் வடிவில் இருக்கும், இன்னொன்று தட்டையாக இருக்கும். இது பெரும்பாலும் தண்ணீரைச் சூடாக்கப் பயன்படுத்தப்படுகிறது. குளிர்பிரதேசங்களில் இது வீட்டை வெதுவெதுப்பாக்கவும் பயன்படுகிறது.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற, சூரியத் தகடுகள் (Solar photovoltaics, solar PV) உபயோகப்படுத்தப்படுகின்றன. சூரியத் தகடுகள், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன. அரசு மானியமளித்தாலும் இது கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயம்தான். ஆனால் வீட்டுக் கட்டுமானச் செலவிலேயே இதைச் சேர்த்தோம் என்றால், வாழ்நாள் முழுவதும் மின்கட்டணம் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கலாம்.

மின்னாற்றல் கண்காணிக்கும் கருவி

இந்தக் கருவியின் மூலம் நம் வீட்டில் அதிகமாக மின்சாரத்தை உபயோகிக்கும் கருவிகளை இனங்கண்டு, அதற்கு ஏற்றது போல் நம் உபயோகத்தை மாற்றி அமைக்கலாம். எக்கோ ஸ்மார்ட் சாக்கேட் அண்ட் ஆஃப் (Ego Smart Socket and App) மிகவும் திறன்மிக்கது. இது கம்பியில்லாத் தொழில்நுட்ப வசதி கொண்டது. இதில் உள்ள டைமர் (timer) வசதி கொண்டு உபயோகத்திலில்லாத உபகரணத்துக்கான மின்சாரத்தை நிறுத்தவும் முடியும் என்பதால் மேலே பார்த்த ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப்பை நாம் தவிர்க்கலாம். இதனுடன் சேர்த்து கூகுள்’ஸ் நெஸ்ட் (Google’s Nest), எனர்ஜி ஸ்டார் அப்பளையன்ஸ் ( Energy Star Appliances) ஆகியவற்றைப் பயன்படுத்தினால் மின்சேமிக்கும் திறன் இன்னும் மேம்படும்.

பசுமைக் கூரை (Green Roof)

வெள்ளை வண்ணம், ஒளியையும், வெப்பத்தையும் பிரதிபலிக்கக்கூடியது என்ற கருத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தப் பசுமைக் கூரை. இது சூரிய ஒளியையும், வெப்பத்தையும் நம் வீட்டுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்புவதால், நம் வீட்டினுள் வெப்பம் வெகுவாகக் குறைகிறது. இதன் மூலம் நம் மின்கட்டணம் 10% முதல் 15% வரை குறைகிறது.

டெஸ்லா சோலார் பேட்டரி

சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தைப் பகலில் பெறலாம். ஆனால் இரவில் என்ன செய்வது? அதற்குத்தான் இந்த பேட்டரி. இது பகலில் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும். சேமிக்கப்பட்டிருக்கும் இந்த மின்சாரத்தை நாம் இரவில் பயன்படுத்தலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்