வேலையிழந்த 300 தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மருத்துவ ஆராய்ச்சியாளர்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கில் வேலையிழந்த 300 தொழிலாளர்களுக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு பிறக்கப்பட்டது. இதனால் வேலையின்றி ஏராளமானோர் தவித்து வருகின்றனர். மேலும் பலர் உணவிற்கே சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து அவர்களுக்கு அரசும், தனியார் அமைப்புகளும் உதவி வருகின்றன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் தொழில்கள் நசிவடைந்ததால் பலர் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் முடங்கியுள்ளனர்.

இதையடுத்து காரைக்குடியில் தன்னார்வலர்கள் ஹெல்பிங் ஹேண்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஏழைகளுக்கு உதவி வருகின்றனர்.

இதை அறிந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் பேராசிரியர் தர்மலிங்கம் ‘ஹெல்பிங் ஹேண்ட்’ அமைப்பிடம் ரூ.ஒரு லட்சம் வழங்கினார்.

அந்த அமைப்பினர் அந்த நிதி மூலம் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300 தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் கருத்தபாண்டியன், டாக்டர் குமரேசன் மற்றும் சையது, செல்வகுமார், கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்