ஊரடங்கு காலத்தில் அரசு மக்கள்மீது சுமத்தும் அடுத்த சுமை, மின்சாரக் கட்டணமாக இருக்குமோ என்னும் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
ஏனெனில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பயன்பாட்டைக் குறிக்க ஊழியர் வராததால் ஏற்கெனவே கட்டணமாகச் செலுத்தியிருந்த தொகையைக் கட்டணமாகச் செலுத்தக் கோரியிருந்தனர். இப்போது நான்கு மாதங்களுக்குப் பிறகு ஊழியர் பயன்பாட்டு அளவைக் குறிக்க வருவார். அப்போது அவர் குறிக்கும் அளவானது நான்கு மாதங்களுக்கானது. எனவே, நமது பயன்பாடு குறைந்தது இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும். மேலும், ஊரடங்கு காரணமாக பெரும்பாலோர் வீட்டிலேயே இருக்கும் காரணத்தால் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும்.
உதாரணமாக, பிப்ரவரி மாதம் 340 யூனிட் பயன்படுத்திய ஒருவர் 650 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தியிருப்பார். அவர் ஏப்ரல் மாதமும் அதே 650 ரூபாயை மட்டுமே செலுத்தியிருப்பார். இப்போது அவரது பயன்பாடு 1350 யூனிட் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கான கட்டணம் ரூ.7390. இதில் கடந்த மாதம் செலுத்திய ரூ. 650ஐக் கழித்தால் எஞ்சிய தொகையான ரூ.6740ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக அவர் பிப்ரவரி மாதம் பயன்படுத்திய அதே பயன்பாட்டு அளவான 340 யூனிட்டைக் கழித்துவிட்டுப்பார்த்தால் அவர் பயன்படுத்தியிருக்கும் மின்சாரத்தின் அளவு 1010 யூனிட்டாக இருக்கும். இதற்கான கட்டணம் ரூ. 5146 மட்டுமே. ஏற்கெனவே ஏப்ரலில் கட்டணமாகச் செலுத்திய தொகையை இப்போது கட்ட வேண்டிய தொகையிலிருந்து கழித்தால் கிடைக்கும் தொகைக்கும் ஏப்ரல் மாதம் பயன்படுத்திய மின்சாரப் பயன்பாட்டு யூனிட்டைக் கழித்தால் கிடைக்கும் தொகைக்குமான வேறுபாடு ரூ.1,594. சராசரியான பயன்பாடு கொண்ட ஒரு சாதாரணக் குடும்பமே இவ்வளவு செலுத்த வேண்டியதிருக்கும்.
உங்கள் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை https://www.tnebnet.org/awp/tariffMaster?execution=e1s1 என்னும் இணையதள முகவரியில் சென்று உங்கள் தகவல்களை உள்ளீடு செய்து அறிந்துகொள்ளலாம்.
தான் அதிகப்படியான மின் கட்டணம் செலுத்த வேண்டியதிருப்பது தொடர்பாக நடிகர் பிரசன்னா ஒரு ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளித்திருந்த மின்சார வாரியம் அவரது கணக்கீடு சரிசெய்யப்படும் என்று கூறியிருந்தது. அவருக்கு மட்டும் கணக்கீடு சரிசெய்யப்பட்டால் போதாது. எல்லோருக்குமே பயன்பாட்டைக் கழித்துவிட்டு தொகையைக் கணக்கிடும் முறையை மின்சார வாரியம் கைக்கொள்வது கரோனா காலத்தில் பல்வேறு பொருளாதார சிரமத்தைச் சந்தித்துவரும் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
21 hours ago
வலைஞர் பக்கம்
23 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago