நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸ் கரோனா ஊரடங்கில் பெண்கள் மீது அதிகரித்துள்ள குடும்ப வன்முறை குறித்து ‘Listen To Her’ என்ற குறும்படத்தை இயக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த குறும்படத்தின் முடிவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ளத் தேசிய மகளிர் ஆணையத்தின் வாட்ஸ் ஆப் தொடர்பு எண் (7217735372), மற்றும் பெண்களுக்கான உதவி எண் 181, மனஅழுத்தம் குறித்த ஆலோசனைகளுக்காக 112 ஆகிய எண்கள் உதவிக்காக வழங்கப்பட்டிருந்தது.
பேசுவதை கேட்க தயாராக இருக்கிறோம்
தேசிய மகளிர் ஆணையம் மற்றும் ‘Special Cell for Women and Children’ மற்றும் டாட்டா சமூக அறிவியல் மையம் (TISS) அமைப்பு நாட்டின் பதினேழு மாநிலங்களில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவக் களப் பணியாளர்களை அமர்த்தியுள்ளனர். இந்த களப்பணியாளர்களின் எண்களை ‘அக்ஷரா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தொகுத்து வெளியிட்டுள்ளது. தொகுக்கப்பட்ட இந்த தொலைப்பேசி பட்டியலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை நந்திதா தாஸ்.
» இடம் - பொருள் - இலக்கியம்: பீஃப் கவிதைகள் - ஒரு பார்வை
» பாடகர், பாடகி, மியூஸிக் சப்ஜெக்ட்; இளையராஜா காலத்தில்தான் எக்கச்சக்கம்
அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் தேசிய மகளிர் ஆணையம், ‘Special Cell for Women and Children’ அமைப்பின் சமூக சேவகர்களின் தொலைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை ‘இந்து தமிழ்’ சார்பில் தொடர்பு கொண்டோம். அப்போது பேசிய சென்னையைச் சேர்ந்த சமூக சேவகிமோகன ப்ரியா கூறுகையில், தமிழகத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ தமிழ்நாடு காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றிவருகிறோம். தற்போது நான்கு மாவட்டங்களில் முன்னோட்ட திட்டமாகச் செயல்படுத்திவருகிறோம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மனநலம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம். எங்களை தொடர்புகொள்ளும் பெண்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும். அவர்களுடைய பிரச்சினைகளைக் கவனமாகக் கேட்கிறோம். சென்னையில் ஆயிரம் விளக்கு காவல் துறை அலுவலகத்தில் செயல்பட்டுவருகிறோம். எங்களிடம் நேரிலோ அல்லது தொலைப்பேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பேசலாம்.
பாதிக்கப்படும் பெண்கள் எங்களிடம் எல்லாவிதமான பிரச்சினைகள் குறித்தும் தயங்காமல் பேசலாம் சென்னையைச் சேர்ந்த பெண்கள் 94983 36002, 94999 71896 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அதேபோல் சேலத்தை சேர்ந்தவர்கள் 94460 93055, மதுரையைச் சேர்ந்தவர்கள் 77083 46858, திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் 98947 43497 உள்ளிட்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம். ஊரடங்கால் பல பெண்கள் தொலைப்பேசி மூலமாக அழைத்துப் பேசுகிறார்கள். அவர்களுக்கு மனநல ஆலோசனைகளும் உடல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடியாக உதவ அவர்களுடைய வீட்டுக்கே காவல் துறையினரை அனுப்பிவைக்கிறோம். அதேபோல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும் எங்களை தொலைப்பேசி மூலமாக அழைத்துப் பேசலாம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago