எப்போது இன்சமாம் உல் ஹக் கிரிக்கெட் அரங்கத்துக்குள் நுழைந்தாரோ அப்போது முதலே அப்போதைய கேப்டன் இம்ரான் கான், இன்சமாம் உல் ஹக்கை சச்சின் டெண்டுல்கருக்கு இணையாகக் குறிப்பிடுவதுண்டு.
எப்போதுமே பாகிஸ்தானின் அபாரமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டு இந்தியர்களுக்குக் கொஞ்சம் பொறாமையும் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், திராவிட், லஷ்மன், சேவாக், கங்குலி ,விராட் கோலி என்று இந்திய பேட்ஸ்மென்கள் மீது பாகிஸ்தானுக்கும் அதிக அளவில் பொறாமையும் இருப்பதை அந்தந்தக் காலக்கட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்டை கூர்மையாக அவதானித்தவர்களால் உணர முடியும்.
இப்போது கூட இங்கு விராட் கோலி என்று உலகம் கொண்டாடினால் உடனே பாபர் ஆஸம் என்று அவர்கள் ஒப்பிட்டு மகிழ்வார்கள். ஒருமுறை இர்பான் பத்தான் பாகிஸ்தானில் ஹாட்ரிக் சாதனை புரிய, ‘இது போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் நாட்டில் வீதிக்கு வீதி கொட்டிக் கிடக்கிறார்கள்’ என்று ஜாவேத் மியாண்டட் கூறியதையும் நாம் அவர்களுக்கு இருக்கும் அங்கீகார நெருக்கடி என்று வர்ணிக்கலாம். இதில் ஒன்றும் தவறில்லை.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் சஞ்சை மஞ்சுரேக்கர் உடனான உரையாடலில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், காலீஸில் மிகச்சிறந்தவர் சச்சின் தான் என்றும் தன் வேகமான பந்துகளைக் கூட சச்சின் ஆடும்போது அவருக்கு கால அவகாசம் கூடுதலாக இருக்கிறது என்றும் கூறி சச்சின் பெஸ்ட் என்றார். ஆனால் முழுநிறைவான கிரிக்கெட் வீரர் என்றால் ஜாக் காலீஸ் என்று கூறினார்.
இந்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கருடன் நடந்த உரையாடலில் இதே ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், தன்னால் இன்சமாம் உல் ஹக்கை வலைப்பயிற்சியில் வீழ்த்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எப்படி பிரெட் லீ, சச்சின் டெண்டுல்கர் தன் பந்துகளை ஆட அதிக கால அவகாசம் உள்ளதாக தான் உணர்ந்ததை குறிப்பிட்டாரோ அது போலவே ஷோயப் அக்தரும், ”உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் இன்சமாம் உல் ஹக்கை வீழ்த்த முடியும் என்று நினைக்கவில்லை. இன்சமாம் உல் ஹக் என் பந்துகளை ஆடுவதில் கால அவகாசம் அவருக்கு இருப்பதை உணர்ந்திருக்கிறேன். என் பந்துகளை மற்ற வீரர்களை ஒப்பிடும்போது ஒரு விநாடி அவர் முன் கூட்டியே பார்த்து விடுவார் என்றே கருதுகிறேன். பிரெட் லீ போலவே என் பந்து வீச்சு ஆக்சனும் சிக்கல் கொண்டது. என்னால் இன்சமாமை வீழ்த்தியிருக்க முடியாது என்றே நான் உணர்ந்திருக்கிறேன்.
வலைப்பயிற்சியில் நான் இன்சமாமை வீழ்த்தியதில்லை. என் பந்துகளை அவர் ஒரு விநாடி முன்கூட்டியே கணித்து விடுவார்” என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
அப்படியே சச்சினுக்கு பிரெட் லீ என்ன சொன்னாரோ அதையே அப்படியே இன்சமாம் உல் ஹக்கிற்குக் கூறுகிறார் என்றால் இது அடையாளம் குறித்த நெருக்கடியாகும். இன்சமாம் உல் ஹக் தன்னளவில் மிகப்பெரிய பேட்ஸ்மென், 1992 உலகக்கோப்பை அவரது மைல்கல், அதன் பிறகும் முச்சதம் அடித்துள்ளார், ஆனால் சச்சினை ஒப்பிடும்போது பின் தங்கிவிட்டார் என்றே கூற வேண்டும். 120 டெஸ்ட் போட்டிகளையும் 378 ஒருநாள் போட்டிகளையும் இன்சமாம் ஆடி அனைத்து வடிவங்களிலும் 20,569 ரன்களை எடுத்துள்ளர் இன்சமாம் உல் ஹக். இப்போது ரோஹித் சர்மா ஆடுவது இன்சமாம் உல் ஹக்கை நினைவூட்டுவதாகப் பலரும் கூறிவருகின்றனர். ஒப்பீடுகள் எப்போதும் தனித்துவம், ஒற்றைத் தனித்துவம் ஆகியவற்றை மறுத்தாலும் வித்தியாசம் என்பதையும் கூடவே மறுத்தே வருவதாகும்.
ஆனால் எப்போதும் இந்தியாவின் கிரேட்களுடன் தங்கள் வீரர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கையும் தாண்டிய அங்கீகார நெருக்கடியாகவே இருந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago