100 தமிழக மருத்துவர்களின் நம்பிக்கை நடனம்

By செய்திப்பிரிவு

நம்பிக்கை, அதுதான் இந்த கோவிட்-19 நோய்த்தொற்றை எதிர்கொண்டுவரும் வேளையில் நம் அனைவருக்குமே தேவையாகயிருக்கிறது. அனைத்துத்தரப்பினருமே இந்தக் கரோனா நோய்த்தொற்றால் ஏதோவொரு வகையில் மன அழுத்தத்தை உணர்ந்துவருகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நேரடியாகக் களத்திலிருந்து போராடிவரும் சுகாதாரத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள் அதிகமான மனஅழுத்தத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.

அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக தமிழ்நாட்டின் சென்னை, வேலூர் மாவட்டங்களின் 35 மருத்துவமனைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ‘Tamil Nadu Doctors beat COVID-19 blues!’ என்ற தலைப்பில் ஒரு நம்பிக்கை நடனக் காணொலியை வெளியிட்டுள்ளனர். மருத்துவர்கள் தீபா ஸ்ரீ, சாய் சுரேந்தேர், மீனா ஆகிய மூன்று பேர் கொண்ட குழு இந்த நடனக் காணொலியை ஒருங்கிணைத்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 60 மருத்துவர்கள், இந்த கோவிட்-19 காலத்தில் நம்பிக்கையை உருவாக்கும் விதத்தில் ஏற்கெனவே பர்ரேல் வில்லியம்ஸின் ‘ஹேப்பி’ பாடலுக்கு நடனமாகியிருந்தனர். தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிமான மருத்துவர்கள் இந்த இக்கட்டான சூழலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம், மனநலனைப் பாதுகாப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், நான்கு நிமிடங்கள் ஒடும் ஒரு நடனக் காணொலியை ‘பி தி ஹோப்’ என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்குமுன் வெளியிட்ட இந்தக் காணொலியை இதுவரை 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். ‘Don’t worry! Be Happy!’ ‘If you are happy and know it clap your hands’ போன்ற ஆல்பம் பாடல்கள், ‘ஆல் இஸ் வெல்’ ‘லெட் மி சிங் ஏ குட்டி ஸ்டோரி’ ‘வாத்தி கமிங்’ போன்ற திரைப்பட பாடல்களுக்கும் உற்சாக நடனமாடியுள்ளனர். மனஅழுத்தத்துக்கு உள்ளாகாமல் இந்தச் சூழலை நம்பிக்கையோடும் மனஉறுதியோடும் எதிர்கொள்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களின் இந்த நடனம் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இந்த நேரத்தில் சுகாதாரப் பணியாளர்களின் ஒப்பற்ற பணியை மதிக்கவும், அவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் பொறுப்பும் நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில் மருத்துவர்களின் இந்த நம்பிக்கை நடனக் காணொலி அமைந்துள்ளது.

காணொலியைப் பார்க்க:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்