இன்று அன்று | 1929 ஆகஸ்ட் 10: உலகின் முதல் குடும்பக் கட்டுப்பாடு மையத்தை நிறுவிய பெண்

By சரித்திரன்

பெண்கள் மருத்துவம் படிக்க முடியாது என்ற நிலை இருந்த நெதர்லாந்தில் பிறந்த அலெட்டா ஹென்ரெடே ஜேகப்ஸ் தனது விடாமுயற்சியின் மூலம், தனது மருத்துவக் கனவைச் சாத்தியமாக்கியவர். ”மருத்துவக் கல்லூரியில் பெண்கள் படிக்க முடியாது” எனக் கூறிய குரோனின்ஜென் பல்கலைக்கழகத்தை எதிர்த்து, நெதர்லாந்து பிரதமரிடம் மனு கொடுத்து மருத்துவ நுழைவுச் சீட்டை வென்றவர் இவர்.

நெதர்லாந்தில் உள்ள சப்பிமீர் நகரில் 1854-ல் பிறந்தார் அலெட்டா ஜேகப்ஸ். அவரது தந்தை ஆபிரஹாம் ஜேகப்ஸ் மருத்துவர்தான் என்றாலும் அத்தனை வருமானம் இல்லை. ஆனால், ஏழை மக்களுக்குக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்தவர் அவர். தன் தந்தையோடு இணைந்து நோயாளிகளின் வீட்டுக்குச் செல்வது சிறுமி அலெட்டாவுக்கு வழக்கம். இதனால் இளம்பிராயத்திலேயே மருத்துவராகவும் ஆவல் கொண்டார். ஆனால் பெண்களுக்கு உகந்தது ஆசிரியர் பணி எனப் பெற்றோர் வற்புறுத்தினர். மருத்துவப் பள்ளியும் அனுமதி மறுத்தது. ஆனால் தன் குறிக்கோளில் உறுதியாக இருந்து ஒரு கட்டத்தில் தந்தையின் ஒப்புதல் பெற்றார். போராடி முதல் பெண் மாணவிகளாக அலெட்டாவும் அவருடைய சகோதரி சர்லோட்டும் 1871-ல் கல்லூரியில் சேர்ந்தனர். 1879-ல் நெதர்லாந்தின் முதல் பெண் மருத்துவரானார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பிரத்தியேகமாக மருத்துவச் சிகிச்சை அளிக்க முடிவெடுத்தார். வாரம் இரு முறை இலவசச் சிகிச்சை அளித்தார். பல முறை கருவுற்றுப் பெண்கள் பாதிக்கப்படுவதைக் கண்ட அதற்கான தீர்வு கண்டறிய முடிவெடுத்தார். 1881-ல் கருத்தடை குறித்து முறையான ஆய்வுகள் செய்த முதல் மருத்துவர் அவரே. 1882-ல் உலகின் முதல் குடும்பக்கட்டுப்பாடு மருத்துவ மையத்தை ஆம்ஸ்டர்டாம் நகரில் நிறுவியவர்.

பெண்கள் ஓட்டுப் போட விரும்பமாட்டார்கள் என நெதர்லாந்து நம்பிய காலம் அது. எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என நெதர்லாந்து பெண்கள் கூறியபோது அதைத் தடை செய்தது. 1899-ல் சர்வதேச பெண்கள் சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டபோது பெண் உரிமை குறித்து விழிப்புணர்வு அலெட்டாவுக்கு உண்டானது. ’விமன் அண்டு எகனாமிக்ஸ்’ (1900), ‘விமன் அண்டு லேபர்’ (1910) போன்ற ஆங்கில நூல்களை டச் மொழியில் மொழிபெயர்த்தார்.

1911-12-ல் அலெட்டாவும் அவர் சகோதரியும் தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, பர்மா, சீனா, ஜப்பான், இலங்கை, இந்தியா, என மூன்றாம் உலக நாடுகளுக்கு பயணித்து அந்நாட்டு பெண்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தன்னுடைய பயண அனுபவங்களை ‘டூ டெலிகிராஃப்’ எனும் டச் நாளிதழில் கட்டுரைகளாக அலெட்டா எழுதினார். பெண்களின் உடல் நலம், சுகாதாரப் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து உழைத்து பெண்கள் சுகாதாரச் சட்டத்தில் மாற்றங்கள் வரக் காரணமாக இருந்த அலெட்டா 1929 ஆகஸ்ட் 10-ல் இயற்கை எய்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்