கரோனாவால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது. அனுதினமும் பொருளீட்டி உண்ணும் மக்களில் பலரே பட்டினியில் இருக்கும் சூழலில் மனிதர்களுடன் இணைந்து வாழும் விலங்குகள், பறவைகளின் நிலை பரிதாபமாக உள்ளது.
அத்தகைய உயிரிகளின் வாழ்வை மேம்படுத்த 'பொதிகைச் சாரல்' என்னும் அமைப்பு வித்தியாசப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் நிறுவனர் தங்கமதியிடம் பேசினேன்.
''கடந்த ஓராண்டாக பறவைகள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடையே ஏற்படுத்தி வருகிறோம். கரோனாவால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் வீட்டில் இருந்து கொண்டே தேவை இல்லாதவற்றைக் கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்கச் சொல்கிறோம். அதேபோல அவர்கள் ஓவியங்களையும் வரையலாம்.
அவற்றைப் புகைப்படம் எடுத்து 9962086565 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்கிறோம். கலைப் பொருட்கள் மற்றும் ஓவியங்களை பொதிகைச் சாரல் பேஸ்புக் பக்கத்தில் ஏலம் விடத் திட்டமிட்டுள்ளோம்.
தாங்கள் உருவாக்கும் கலை பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை மக்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். 25 பேரின் பொருட்கள் இணைந்தவுடன் அவர்களது பொருட்களை 'பொதிகைச்சாரல்' குழுவில் ஏலம் விட உள்ளோம்.
இதில் 3 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பிரிவிலும், 11 முதல் 18 வயது வரை ஒரு பிரிவிலும், 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது பிரிவிலும் கலந்து கொள்ளலாம்'' என்கிறார்.
ஏலம் மூலம் திரட்டப்படும் பணத்தில் பாதியை, பொருட்களை உருவாக்கியவருக்கும், மீதித் தொகையை பறவைகள் மற்றும் விலங்குகளின் நலனும் பயன்படுத்த பொதிகைச் சாரல் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் பேசும் தங்கமதி, ''தனிநபர்களால் குறிப்பிட்ட அளவே சமூக சேவை செய்யமுடியும். மற்றவர்களிடம் வெறுமனே சென்று பணம் கேட்பது தவறு.
அதனால் வீட்டில் இருந்துகொண்டு சுயமாகச் சம்பாதிக்கலாம் என்ற உத்வேகத்தை அவர்களுக்கு அளித்து, அத்துடன் வாயில்லா ஜீவன்களுக்கும் உதவ முடிவெடுத்து, செயல்படுத்தி வருகிறோம்'' என்றார் தங்கமதி.
கூடுதல் தகவல்களுக்கு: 9962086565
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago