மதுரையில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

By கே.கே.மகேஷ்

புத்தாண்டு கொண்டாட்டத்தை அறிவை வளர்க்கும் விதமாக நடத்திவரும் மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் இந்தாண்டும் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

2020-ம் ஆண்டுப் பிறப்பையொட்டி, இன்று(31ம்தேதி) இரவு மதுரை மேலக்கோபுர வீதியில் உள்ள புத்தகக்கடையானது விடிய விடிய செயல்படும். விழாவில் அனைத்து புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 10% தள்ளுபடி வழங்கப்படும். ஒரு சில நூல்களுக்கு 90% வரையிலும் தள்ளுபடி உண்டு.

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் டி.செல்வராஜின் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற ரூ.450 விலையுள்ள 'தோல்' நாவல் சிறப்பு விலையாக ரூ.320க்கு விற்கப்படவுள்ளது.

அதேபோல கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் தேர்வு நூல்கள், பசு.கௌதமனின் பெரியார் தொகுதி, 'தாய்' உள்ளிட்ட கார்க்கியின் அனைத்து நூல்கள், ரஷ்ய இலக்கியங்களான 'போரும் அமைதியும்', 'அன்னக்கரினீனா', 'வீரம் விளைந்தது', 'சகோதரிகள்', 'சக்கரவர்த்தி பீட்டர்', ராகுல் சாங்கிருத்யானின் அனைத்து நூல்கள் போன்றவற்றுக்கு 30% தள்ளுபடி உண்டு.

சாகித்ய அகாடெமி வெளியீடுகளுக்கும், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா நூல்களுக்கும் 20% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என்று என்சிபிஎச் நிறுவன மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

மேலும்