முதல் முறையாக தாயின் குரல் கேட்டு சிரித்து மகிழும் குழந்தை: நெட்டிசன்களை நெகிழவைத்த வைரல் வீடியோ

By செய்திப்பிரிவு

செவித்திறன் இல்லாமல் பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஹியரிங் எய்ட் இயந்திரம் பொருத்தப்பட்டவுடன் தாயின் குரலைக் கேட்டு அந்தக் குழந்தை காட்டும் ரியாக்‌ஷன் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பால் அடிசன் (32). இவரது 4 மாத குழந்தைக்கு பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது.
அண்மையில்தான் இது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பால் அடிசன் குழந்தை ஜார்ஜினாவுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஹியரிங் எய்டை வாங்கியுள்ளார்.

அதைப் பொருத்தியவுடன் குழந்தை தங்களின் குரலைக் கேட்டு குதூகலிப்பதைக் கண்டு தாய், தந்தை எல்லையில்லா மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் காலையில் ஜார்ஜினாவுக்கு ஹியரிங் எய்டைப் பொருத்தும் தாய் குழந்தையிடம் பேச முதல் ஒலியைக் கேட்டவுடன் குழந்தை காட்டும் பாவனைகள் கொள்ளை அழகாக இருந்துள்ளது.

இதனை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பால் அடிசன்.

தனது ட்விட்டரில் பக்கத்தில் குழந்தை ஜார்ஜினாவின் புன்னகை வீடியோவை வெளியிட்டு, எங்கள் மகளின் புதிய ஹியரிங் எய்டை காலையில் ஆன் செய்தவுடன்.. என்று மட்டுமே எழுதியிருக்கிறார். அதற்கு மேல் அவர் ஏதும் எழுதாதற்கு விளக்கமாக குழந்தையின் சிரிப்பும், விதவிதமான ஓசையும், புன்னகையும், முக பாவனைகளும் விடையாகின்றன.

இந்த வீடியோவின் கீழ் குழந்தை ஜார்ஜினாவுக்கும் பெற்றோருக்கும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்