அகில உலக நாகஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவரும் இணையற்ற நாகஸ்வர வித்வானாகத் திகழ்ந்தவருமான டி.என். ராஜரத்தினம் பிள்ளை பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l தஞ்சாவூர் மாவட்டம், திருமருகல் என்ற ஊரில் பிறந்தார் (1898). பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், பாலசுப்பிர மணியம். இவர் பிறந்த சில நாட்களி லேயே தந்தை இறந்ததால், தாய், குழந்தையுடன் நாகஸ்வர கலைஞரும், தன் சகோதரருமான நடேசப்பிள்ளையின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவருக்கு குழந்தை இல்லை என்பதால் இந்தக் குழந்தையையே தத்து எடுத்துக்கொண் டார். ‘ராஜரத்தினம்’ என்ற புதிய பெயரைச் சூட்டி வளர்த்தார்.
l சித்தப்பா கதிரேசன் பிள்ளையிடமும், திருக்கோடிக்காவல் கிருஷ்ண அய்யர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர், கண்ணுச்சாமி பிள்ளை ஆகியோரிடமும் நாகஸ்வரம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். நாகஸ்வர இசையில் நிபுணத்துவம் பெற்றார். ஆரம்ப நாட்களில் திருவாடுதுறை கோயிலில் வாசித்து வந்தார்.
l பின்னர் திருவாடுதுறை ஆதீன வித்வானாக நியமிக்கப்பட்டார். இவரது முதல் நாகஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன.
l வழக்கமான நாகஸ்வர இசைக் கலைஞர்கள் போல் உடை அணியா மல், கோட், ஷெர்வாணி அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொள்வார். கழுத்தில் தங்கச் சங்கிலி, கைவிரல்களில் மோதிரங்கள், மணிக்கட்டில் ஒரு பெரிய தங்க கடா போன்ற சங்கிலி இவற்றோடு அலங்காரமாக பவனி வந்தார்.
l ‘நாகஸ்வர சக்ரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டு மல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். கப்பல் போன்ற காரில்தான் பயணம் செய்வார். சுயமரியாதை கொண்டவர்.
l சட்டை போட்டுக்கொண்டு, பொன்னாடை போர்த்தியபடி நாகஸ்வரம் வாசித்த ஒரே ஒருவர் இவர்தான். இலங்கை, மலேசியா நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ‘மிஸ் கமலா,’ ‘கவி காளமேகம்’ ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
l ‘சங்கீத அகாடமி விருது’ ‘அகில உலக நாகஸ்வர சக்ரவர்த்தி’ உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்தரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை ஒலித்தது. அந்த விழாவுக்கு இவர் ஒரு சமஸ்தான அதிபர் போல ஆடை அணிந்து சென்றிருந்தார்.
l அவரைப் பார்த்த நேருவே ஆச்சரியமடைந்து, அவரிடம் ‘இங்கே வந்திருக்கும் சமஸ்தான அதிபர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டேன்’ என்று கூறினாராம். காஞ்சி பரமாச்சாரியரிடம் பக்தி கொண்டவர். ஒருமுறை மாயவரம் சென்று கொண்டிருந்தபோது தொலைவில் சுவாமிகள் பட்டனப் பிரவேசம் வருவதை அறிந்தார். உடனே காரிலிருந்து இறங்கி தெருவோரத்தில் நின்றுகொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கினார்.
l இசை ஒலித்ததைக் கேட்டவுடனேயே பரமாச்சாரியார் ‘ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே’ என்று கூறி அங்கே போகுமாறு பல்லக்குத் தூக்கிகளிடம் உத்தரவிட்டார். ஒன்றரை மணி நேரம் இவர் வாசிக்க, மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது. பரமாச்சார்யார் மெய்மறந்து கேட்டு ரசித்துவிட்டு, அவருக்கு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். அதை பக்தியுடன் பெற்றுக்கொண்டு ‘இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினாராம்.
l ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த ‘தோடி’ ராகத் தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடுஇணையற்ற நாகஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என். ராஜரத்தினம் பிள்ளை 1956-ல் 58-ம் வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago