பிரபல இந்தி திரைப்படப் பின்னணிப் பாடகரும், நடிகருமான முகேஷ் சந்த் மாத்தூர் (Mukesh Chand Mathur) பிறந்த தினம் இன்று (ஜூலை 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l டெல்லியில் நடுத்தர வகுப்பு பஞ்சாபி குடும்பத்தில் (1923) பிறந்தவர். தந்தை பொறியாளர். வீட்டில் அக்காவுக்கு இசை ஆசிரியர் பாட்டு சொல்லிக் கொடுப்பதை பக்கத்து அறையில் இருந்து இந்த சிறுவன் ஆர்வத்தோடு கேட்பான்.
l பிரபல பாடகர் கே.எல்.சேகல் பாடல்கள் என்றால் உயிர். அவரைப் போலவே பாடுவான். 10-ம் வகுப்பு முடித்ததும் டெல்லியில் அரசு வேலை கிடைத்தது. அலுவலகப் பணி முடிந்த பிறகு, பாடல்களை பாடிப் பழகுவார்.
l சகோதரி திருமணத்தில் இவர் பாடியபோது, தூரத்து உறவினரும் பிரபல நடிகருமான மோதிலாலை இவரது குரல் வசீகரித்தது. இவரை தன்னுடன் மும்பைக்கு அழைத்துச்சென்று, பண்டிட் ஜகன்னாத் பிரசாத்திடம் சங்கீதம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்.
l திரையுலகில் பாடகராக சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் நாளுக்கு நாள் வலுவடைந்தது. 1941-ல் ‘நிர்தோஷ்’ என்ற படத்தில் நடிக்கவும் பாடவும் வாய்ப்பு கிடைத்தது.
l ‘பெஹலி நஸர்’ படத்தில் இவர் பாடிய ‘தில் ஜல்தா ஹை தோ ஜல்னே தே’ பாடல் மூலம் பிரபலமானார். தன் ஆதர்ச பாடகர் சேகல் போலவே இப்பாடலை பாடினார். 1948-ல் வெளிவந்த ‘மேலா’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் நவுஷாத் அலி உதவியுடன் தனக்கென்ற தனி பாணியை வகுத்துக்கொண்டு, முத்திரை பதித்தார்.
l ‘ஆஹ்’, ‘அனுராக்’ போன்ற படங்களில் நடித்தார். எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்காததால், மீண்டும் பாடகராக களமிறங்கினார். 1958-ல் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களில் பாடி, பின்னணி உலகில் தனி இடம்பிடித்தார்.
l ராஜ்கபூரின் ஏறக்குறைய அனைத்து படங்களிலும் இவர்தான் பின்னணி பாடினார். இவரை ராஜ்கபூரின் குரலாகவே மக்கள் பார்த்தனர். ‘ஆவாரா’, ‘ஸ்ரீ’, ‘பர்வரிஷ்’, ‘மேரா நாம் ஜோக்கர்’, ‘சங்கம்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
l உலகம் முழுவதும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார். 3 முறை ஃபிலிம்பேர் விருது பெற்றுள்ளார். மறைவுக்குப் பிறகும் ஒருமுறை இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1974-ல் ‘ரஜனிகந்தா’ திரைப்படத்தில் ‘கயி பார் யூஹி தேகா ஹை’ பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
l 1941-ல் தொடங்கிய இவரது இசைப் பயணம், இறுதிவரை வெற்றிகரமாகத் தொடர்ந்தது. ‘தங்கக் குரல் மனிதர்’ என்று போற்றப்பட்டார். மகிழ்ச்சி, உல்லாசம், துயரம், காதல் என அத்தனை பாவங்களையும் கச்சிதமாக வெளிப்படுத்தியது முகேஷின் குரல். இவரது குரலில் வெளிப்படும் வேதனை, ரசிகர்களின் ஆன்மாவுக்குள் ஊடுருவி கண்களில் இருந்து நீரை வரவழைக்கும் அளவுக்கு உருக்கமானது.
l இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள முகேஷ் 1976-ல் அமெரிக்காவில் இசைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு 53-வது வயதில் காலமானார். இவர் இறந்ததும், ‘நான் என் குரலை இழந்துவிட்டேன்’ என்றார் ராஜ்கபூர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago