உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர், எழுத்தால் அதிகம் சம்பாதித்தவர் என்று பெயர்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) பிறந்த தினம் இன்று (ஜூலை 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் (1802) பிறந்தார். இவரது தந்தை, நெப்போலியனின் குதிரைப்படை வீரர். உலகின் பல பகுதிகளுக்கும் செல்வார். சென்று வந்ததும் அந்நாட்டின் சிறப்பம்சங்கள், எழுத்தாளர்கள், அவர்களது நூல்கள் பற்றி மகனிடம் விவரிப்பார். பேனாவின் சக்தி, எழுத்தின் வலிமையை பிள்ளைக்கு கதைபோல கூறுவார்.
l டூமாஸின் 4 வயதில் அருமை அப்பா இறந்தார். குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தையைப் படிக்கவைக்க தாய் கடுமையாக உழைத்தார்.
l தந்தையின் இன்னபிற வீரதீரச் செயல்களை தாயிடம் கேட்டறிந்த சிறுவன், சாகசங்கள் நிறைந்த கற்பனை உலகில் சஞ்சரித்தான். பைபிள், ராபின்சன் க்ரூசோ, 1001 இரவுகள் ஆகியவற்றை ஆவலோடு படித்தான்.
l ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக வேலைபார்த்தார். 20 வயதில் பாரீஸ் சென்று அரண்மனையில் பணிபுரிந்தார். எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை நகல் எடுக்கும் பணி கிடைத்தது. அப்போது, பத்திரிகைகளுக்கு கதை எழுதத் தொடங்கினார். நாடகங்களும் எழுதினார்.
l இயல்பாகவே எழுத்தாற்றல் இருந்ததால், சீக்கிரமே பிரபலமானார். இவரது ரொமான்டிக் பாணி படைப்புகள் மிகவும் பிரபலமடைந்தன. சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகளையும் எழுதினார். பிரான்ஸ் ஆட்சியாளர்களின் கோழைத்தனங்கள், மேல்தட்டு வர்க்கத்தின் போலித்தனமான வாழ்க்கைகளை இவரது படைப்புகள் அம்பலப்படுத்தின.
l ‘தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ’, ‘த த்ரீ மஸ்கிடேர்ஸ்’, ‘ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்’ ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன. ஐரோப்பா முழுவதும் இவரது புகழ் பரவியது.
l 20 வயதில் எழுதத் தொடங்கி வாழ்நாள் இறுதிவரை எழுதியவர். ஏறக்குறைய 1,200 நூல்களை எழுதி சாதனை படைத்தவர். இதுவரை உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் இவர்தான்.
l உலகில் வேறு எந்த எழுத்தாளரையும்விட, எழுத்து மூலம் அதிகம் பணம் குவித்தவர் என்றும் கூறப்படுகிறது. எவ்வளவு வேகமாக சம்பாதித்தாரோ அதைவிட வேகமாக கேளிக்கை கொண்டாட்டங்களில் பணத்தை இழந்தார்.
l பாரீஸில் 1853-ல் ஒரு நாளிதழ் தொடங்கி 4 ஆண்டுகள் நடத்தினார். பிறகு மான்ட் கிறிஸ்டோ என்ற வார இதழை 3 ஆண்டுகள் நடத்தினார். இத்தாலியின் நேபிள்ஸ் நகர அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். மீண்டும் பாரீஸ் திரும்பிய இவரை கடன்காரர்கள் விரட்டினர். ஆனபோதிலும், எழுதுவதை மட்டும் இவர் நிறுத்தவே இல்லை.
l நாவல்களை நீலநிறத் தாளிலும், கவிதைகளை மஞ்சள்நிறத் தாளிலும், கட்டுரைகளை ரோஜாநிறத் தாளிலும் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கலையின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்ஸாண்டர் டூமாஸ் 68 வயதில் (1870) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago