நிறவெறிக்கு எதிராகப் போராடி, புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்வதற்குக் காரணமாகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலா பிறந்த தினம் இன்று (ஜூலை 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :
l தென்னாப்பிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் பிறந்தார் (1918). தந்தை, சோசா பழங்குடி இன மக்களின் தலைவர். 9-வது வயதில் தந்தை காலமானார். அந்தக் குடும்பத்தில் முதன் முதலில் பள்ளி சென்றவர் இவர்தான். இவர் முதலில் படித்த பள்ளியில் இவருக்கு ‘நெல்சன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
l லண்டன், தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சட்டக் கல்வியும் பயின்றார். கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார். இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்களை நடத்தியதால் அரசு, இவரைக் கைது செய்தது. 4 ஆண்டு விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
l அறப் போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. இதனால் அறப்போராட்டத்தைக் கைவிட்டு ஆயுத வழிமுறையை நாடினார். 1961-ல் இந்த இயக்கத்தின் ஆயுதப்படைத் தலைவராக உருவெடுத்தார். ஆதரவு நாடுகளின் உதவியுடன் கொரில்லா தாக்குதல்களை நடத்தினார்
l இவர்மீது மனித உரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தியது. 1962-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. சிறைவாசம் 27 ஆண்டுகள் நீடித்தது
l இவ்வளவு நீண்ட சிறைத்தண்டனையை உலகில் எந்தத் தலைவரும் அனுபவித்தது கிடையாது. 1988-ல் கடுமையான காச நோய் தாக்கியும் விடுதலை செய்யப்படவில்லை. ‘மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என அரசின் நிபந்தனையை நிராகரித்தார்.
l நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவியேற்றது. புதிய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தென்னாப்பிரிக்கா ஒரு மக்களாட்சி நாடாகப் பின்னர் மலர்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்தன. இறுதியில் 1990-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அப்போது இவருக்கு வயது 71.
l வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நாட்டு விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடினார். இறுதியில் 1994-ல் நாடு விடுதலை அடைந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். 1999-ல் பதவியைவிட்டு விலகிய இவர், 2-வது முறை போட்டியிட மறுத்துவிட்டார்.
l அடக்கு முறையாளர்களுக்கும் அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படும் பல்வேறு முனைப்புகளில் ஈடுபட்டார். உண்மை மற்றும் சமாதான ஆணையத்தை (Truth and Reconciliation Commission) அமைத்தார். உலக வரலாற்றில் இந்த முனைப்பு ஒரு சிறந்த முன்மாதிரியாக கருதப்படுகிறது. உலக சமாதானத் துக்காக இவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி இவர் சிறையில் இருந்தபோதே இந்திய அரசு ‘நேரு சமாதான விருது’ வழங்கியது.
l 1990-ல் இந்திய அரசு பாரத ரத்னா விருதும் வழங்கியது. இந்தியர் அல்லாத ஒருவருக்கு இந்த விருது அப்போதுதான் முதன்முறையாக வழங்கப்பட்டது. 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் வழங்கப்பட்டது.
l 2007-ல் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் இவரது சிலை நிறுவப்பட்டது. இவர் உலகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறவெறிக்கு எதிரான போராட்டங்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த நெல்ஸன் மண்டேலா, 2013-ம் ஆண்டு, 95-ம் வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago