இர.ந.வீரப்பன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

மலேசியத் தமிழ் அறிஞரும், உலகத் தமிழர் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான இர.ந.வீரப்பன் (R.N.Veerapan) பிறந்த தினம் இன்று (ஜூன் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இலங்கையின் நுவரெலியா தோட்டத்தில் (1930) பிறந்தவர். அங்கிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறியவர். மலேசியாவை தாய்நாடாக மதித்தவர். 1953-ல் ஈச்சமரத் தோட்ட தமிழ்ப் பள்ளியில் தொடங்கி, தென்னைமரத் தோட்டப் பள்ளி, ராசாக் தோட்டப் பள்ளி உட்பட பல பள்ளிகளில்1985 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியப் பணியை இறைப் பணியாக மேற்கொண்டவர்.

l கிலாங் அப்துல் சமது இடைநிலைப் பள்ளியில் பணியாற்றிய போது ‘உலகத்தமிழர் குரல்’ என்ற மாதாந்திர சிற்றிதழை வெளியிட்டு வந்தார். மலாய் தமிழ் ஆங்கில அகராதி, மலேசியத் தமிழர்கள், உலகத் தமிழர், இலக்கிய இதயம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

l சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் தொண்டாற்றியவர்.

l 43 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களோடு தொடர்பு கொண்டு, ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார். 33 நூல்களை எழுதி வெளியிட்டு மலேசியத் தமிழர்களுக்கு பெருமை தேடிக் கொடுத்தார். தமிழகத்தின் பாவலர் ஐயா கதிர் முத்தையனார், லண்டனின் சுரதா முருகையனார் இவரைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளனர்.

l 40 நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழ் உயர்வுக்காக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக 25 ஆண்டுகாலம் இருந்து தொண்டாற்றினார். உலகத் தமிழர் - மலேசியத் தமிழர்கள் இடையே நல்ல அறிமுகத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தியவர்.

l தமிழ் மண், இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொண்டவர். மலேசியத் தமிழரின் நிலையை புள்ளி விவரங்கள், வரலாற்று உதாரணங்களோடு தொகுத்து இவர் எழுதிய ‘மலேசியத் தமிழர்கள்’ என்ற புத்தகம் மிகவும் பிரபலம்.

l பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத் திய இவர், தன் பெயருக்கு முன்னால், முதலில் தாயின் பெயரையும் (இரத்தினம்), பின்னர் தந்தையின் பெயரையும் (நடேசன்) முதலெழுத்துகளாக இணைத்துக் கொண்டார்.

l தன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டியதோடு அவர்களுக் குத் தமிழ் உணர்வையும் ஊட்டி வளர்த்தவர். இவரது மகள் வீ.முல்லை, சிறந்த எழுத்தாளராக, தமிழ்ச் சிந்தனையாளராக தமிழ்ப் பணி ஆற்றிவருகிறார்.

l இவர் தொடங்கிய மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகள், தமிழுக்கு ஆக்கப்பூர்வ மான பணிகளை இன்றும் அமைதியாக செய்துவருகிறது.

l உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் ‘உலகத் தமிழர்’ என்று போற்றப்பட்டவரும், புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி பல ஆய்வு நூல்களை எழுதியவருமான இர.ந.வீரப்பன் 69 வயதில் (1999) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்