தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்துதான் இந்த அதிரடி நடவடிக்கை.
விபத்துகளின்போது உயிர் காக்கும் கட்டாய ஹெல்மெட் விதி வரவேற்கப்பட்டாலும், அதில் பலவிதமான நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் ட்விட்டரில் புலம்பி வருகின்றனர். கட்டாயமாக்கப்பட்ட சட்டத்தை மதிக்கத் தான் வேண்டியிருந்தாலும், ஹெல்மெட்டுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்கள் ஓயவில்லை. ட்வீட்டாம்லேட்டில் சில ஹெல்மெட்மயமான கருத்துக்கள்...
வடிவேலன் கோ @Vadirocks - இரு சக்கர வாகனம் ஓட்டும்போது நான் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தான் இன்று உயிருடன் நலமாக உள்ளேன். 1800 மதிப்புள்ள ஹெல்மெட் என்னை காப்பாற்றியது.
லொள்ளு மாணிக்ஸ் @b82174f6c04b47a - 'தம்பி! இது டூ வீலர் ஸ்டாண்ட். பக்கத்துலப் பாரு ஹெல்மெட் ஸ்டாண்ட் இருக்கு அங்கபோய் வெச்சுட்டு டோக்கன் போட்டுக்கோ #ஹெல்மெட் !!!
Jesu balan @JESUBLN - #ஹெல்மெட் போட்டதால விபத்தில் உயிர் பிழைத்தேன். ஹெல்மெட் போடாத என் நண்பன் தலையில் அடிபட்டு உயிரிழந்தான். தயவுசெய்து ஹெல்மெட் போடுங்க.
மாயவரத்தான்.... @mayavarathaan - மீண்டும் ஒரு சில மாதங்கள் ஹெல்மெட் விற்பனை படு சூப்பராகப் போகும். #அம்புட்டு தான். :(
Veera @veera_ganesan - மக்களே, ஹெல்மெட் அணிவதோடு சாலை விதிகளையும் மதித்து நடங்கள்! டிராபிக் லைட் பார்த்து பயணியுங்கள்! விபத்தை தவிர்ப்போம்! விழிப்புடன் இருப்போம்!
இனி அவன்© @Iniyavan_Voice - "ஹெல்மெட்" உயிரை காப்பாத்துதோ இல்லையோ, வீட்டுக்கு தெரியாம லவ் பண்றவங்கள யாரும் பாக்காவிடமா நல்லா காப்பாத்தும். சோ இப்படியாச்சும் #WearHelmet.
மனிதன் @RealManithan - ஹெல்மெட் போட்டால் ஆக்சிடெண்ட்ல உயிர் எதுவும் போகாது என்பது #highlevelstupidity.
கர்ணன் மாரியப்பன் - வண்டி ஓட்டுறவங்களுக்கு ஹெல்மெட் என்பது ஓகே. பின்னாடி உக்கார்றவங்களும் ஹெல்மெட் போடணுங்கறது கொஞ்சம் சிரமம்தான். மாடே இல்லாதவன் கயிறாவது வாங்கிருக்கனுங்கற கதையால்ல இருக்கு இந்தத் தீர்ப்பு!?!
#வாடகைஹெல்மெட்கடை_ஆரம்பிச்சா_முன்னுக்குவந்திடலாம்_போலிருக்குதே?!?
Surya Born To Win @Surya_BornToWin - மூன்று முறை என்னை உயிர் காத்தது ஹெல்மெட்! ஆகவே தலைக்கவசம் உயிர் கவசம்! இதில் கிண்டலல்களுக்கு இடமில்லை!
வாழவந்தார் @Iam_SuMu - ஹெல்மெட் அணியும்போது கூலிங்க்ளாஸ் அணிய முடியாது என்பதை தவிர ஹெல்மெட் அணிவதில் வேறெந்த தயக்கமும் எனக்கில்லை!!
வேலைவாய்ப்பு தகவல் @gokula15sai - ஹெல்மெட் கட்டாயம் அணிய அறிவுறுத்தும் வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம், விபத்திற்கு காரணமாகும் டாஸ்மாக் சரக்கை ஏன் ஒழிக்க உத்தரவு போடக்கூடாது?
செல்லூர் கேடி @dhatchana99 - தரமில்லாத, நெரிசலான, பாதுகாப்பு குறைவான சாலையில், நாம் வண்டி ஓட்ட ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் நம் ஆயுளை எப்படி தீர்மானிக்க முடியும்?
ஏகலைவன் @vkumaru - ஹெல்மெட் சப்போட்டர்ஸ் பக்கத்து தெருவில் பால்பாக்கெட் வாங்கவும், பிள்ளையை ஸ்கூலில் விட்டு வரவும் ஹெல்மெட் அணிந்துதான் செல்வார்கள் என நம்புவோம்.
rizbabu @kossybabu - கைப்பேசியின் திரையில் கீறல் விழாமல் காப்பதற்காக கவசம் இடும் இந்த சமூகம், உயிரைக் காக்கும் தலைக்கவசம் அணிய மறுக்கிறது!!
ரேவதி @vrewathy - கடன உடன பட்டாச்சும் ஒரு ஹெல்மெட் கடைய ஓபன் பண்ணுங்க. அப்புறம் ஆசியாவுலயே பெரிய பணக்காரர் நீங்க தான் #Idea.
தெனாலி™ @i_thenali - இப்பவே நிறைய டிராபிக் போலீஸ்காரங்க புது வீடு கட்ட அஸ்திவாரம் போட்டாச்சுன்னு கேள்வி #ஹெல்மெட்கட்டாயம்.
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams - பஸ் கிடைக்காம, யார் கிட்டயாவது பைக்ல லிஃப்ட் கேட்டு போகனும்னா, கூடவே ஒரு ஹெல்மெட் வச்சுட்டு சுத்தனும் போலருக்கே.
ச ப் பா ணி @manipmp - எல்லோரும் ஹெல்மெட் வாங்கிய பிறகு, அணிவது அவரவர் விருப்பம் எனச் சொல்லப்போறாங்க.
Sen @Sen_Tamilan - மலிவு விலையில் அல்லது விலையில்லா #தலைக்கவசம் அரசே தரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் தேசம் இது! #தேர்தல்2016.
சொரூபா @i_Soruba - தலைக்கவசம் போடாததால, தலைல அடிப்பட்டு இறந்த ஒரு சொந்தமோ, ஒரு நட்போ, அக்கம் பக்க உறவினரையோ நாம நிச்சயம் கடந்திருப்போம் #Usesofhelmet.
Lakshmi R @dlakshravi - பைக்ல பின்னால உட்கார்ந்து பேசிட்டே வர்றவங்க என்ன பண்றது? ஹெல்மெட் முட்டாது?
எமகாதகன் !!! @Aathithamilan - ஹெட் செட் போட்டுச்செல்வதைவிட ஹெல்மெட் போடாமல் செல்வது பேராபத்து.
ஃபேஸ்புக்கிலிருந்து....
Shaik Dawood B Positive - தலைகனத்தை கட்டாயமாக்கியுள்ளது சட்டம் #ஹெல்மெட்.
Ball Apple - உடலின் மற்ற இடங்களில் அடி பட்டால் மரணம் நிகழாதா? உடல் முழுக்க மறைத்து புல்லட் புரூப் ஆடைகள் அணிந்து வாகனம் ஓட்டுவது கட்டாயம் என்று சட்டம் போடுங்கள்.
Leo Mady - ஹெல்மெட் தொலைந்தால் கண்டுபிடித்து தருவார்களா? #ஹெல்மெட் கட்டாய இம்சைகள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago