என்.டி.ராமாராவ் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

என்.டி.ஆர். என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தெலுங்கு திரைப்பட நடிகரும், இயக்குநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், மாபெரும் மக்கள் தலைவராகப் போற்றப்பட்டவருமான என்.டி.ராமாராவ் பிறந்த தினம் இன்று (மே.28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

lஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் வளமான, செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் (1923). இவரது இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ். தந்தை ஒரு விவசாயி. சொந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் இவரது மாமா இவரை தத்து எடுத்துக் கொண்டதால், அவருடன் விஜயவாடா சென்றார். அங்கேயே ஒரு பள்ளியில் படித்துவந்தார்.

lநல்ல குரல் வளம் இருந்ததால் இளம் வயதில் பெரும்பாலான நேரங்களில் பாடல்கள் பாடுவதில் ஆர்வமாக இருந்தார். திடீரென்று குடும்பம் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் பள்ளிப் படிப்பு தாமதமானது.

l20-வது வயதுக்கு மேல் ஆந்திர பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்திய சிவில் சர்வீசில் வேலை கிடைத்தாலும் தெலுங்கு திரையுலகையே இவர் தேர்ந்தெடுத்தார். நடிப்பின் மீது கொண்ட பற்று காரணமாக கல்லூரி நாடகங்களிலும் மற்ற மேடை நாடகங்களிலும் தீவிரமாக கலந்துகொண்டார்.

l1947-ல் மன தேசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் பி.ஏ.சுப்பாராவின் ‘பல்லேடுரி பில்ல’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இது தென்னிந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி இவருக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது.

l1951-ல் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் வெளிவந்த ‘பாதாள பைரவி’ திரைப்படம் இந்தியா முழுவதும் ஓடி, அபார வெற்றி பெற்றது. மல்லேஸ்வரி, சந்திரஹாரம் ஆகியவை இவரது திரைப்பட வாழ்வில் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். லவகுசா, மாயா பஜார் திரைப்படங்கள் இவரது முந்தைய படங்களின் சாதனையை முறியடித்தன. பல புராண படங்களில் இவர் ஸ்ரீ ராமனாக, கிருஷ்ணனாக வலம் வந்து ரசிகர்களைக் கொள்ளை கொண்டார்.

lஅதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றாலே எம்.டி.ஆர். என்ற நிலை ஏற்பட்டது. பாமர மக்கள் இவரை பக்தியுடன் பார்த்தனர். தெலுங்குத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். 40 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த இவரது திரையுலகப் பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

lதெலுங்கில் மட்டுமல்லாமல் 15 தமிழ் படங்களிலும், ஒரு சில இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை 10 முறையும், 1968-ல் தேசிய விருதையும், பத்ம விருதையும் வென்றுள்ளார்.

lஆந்திர பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கதை, வசனமும் எழுதியுள்ளார். 1980-களில் திரையுலகிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்டார். தன்னை பிரபலமாக்கிய திரையுலகுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் பல வசதிகளை பெற்றுத் தந்தார்.

l1982-ல் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கினார். எடுத்த எடுப்பிலேயே கட்சி மக்களிடையே பிரபலமடைந்தது. மக்களின் பேராதரவுடன் 1983-1994 ஆண்டுகளுக்கு இடையே 3 முறை ஆந்திர மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

lஅந்த சமயத்தில் மாநில வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். ஆந்திர மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து வரும் என்.டி.ராமாராவ், 1996-ல் தனது 72-ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்