இசை மேதை மொஸார்ட்டின் இறப்புக்குக் காரணமானவர் என்று (தவறாக) கருதப்பட்டவர் ஆண்டானியோ சலியேரி. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளின் குறிப்பிடத் தக்க மேற்கத்திய இசைக் கலைஞர்களில் ஒருவரான சலியேரி, இத்தாலியின் வெனிஸ் நகரில் 1750 ஆகஸ்ட் 18-ல் பிறந்தார்.
தனது 16-வது வயதில், எஃப்.எல்.காஸ்மான் என்பவரால் இசை நகரமான வியன்னாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சலியேரி. அங்கு ஜெர்மனியின் பேரரசர் இரண்டாம் ஜோசப்பிடம் சலியேரியை அறிமுகம் செய்துவைத்தார் காஸ்மான். அந்தக் காலகட்டத்தில் பியெத்ரோ மெடாஸ்டாசியோ மற்றும் கிறிஸ்டோஃப் கிளக் ஆகிய இசை மேதைகளின் தொடர்பும் சலியேரிக்குக் கிடைத்தது. அவர்களிடம் மேற்கத்திய பாரம்பரிய இசையைக் கற்றுத் தேர்ந்தார். 1770-ல் வியன்னாவில் உள்ள புகழ்பெற்ற பர்ஜ் தியேட்டர் அரங்கில் தனது முதல் ஓபராவை அரங்கேற்றம் செய்தார்.
4 ஆண்டுகள் கழித்து அரண்மனைத் தலைமை இசைக் கலைஞராக அவரை நியமித்தார் பேரரசர் இரண்டாம் ஜோசப். 1788-ல் இசையமைப்பு தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ள ‘ஹாஃப்காப்மெட்மெய்ஸ்டர்’ எனும் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்பதவியில் 36 ஆண்டுகள் இருந்தார். தனது படைப்பூக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், ஆஸ்திரியாவுக்கு மட்டுமல்லாமல், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் இசை நிறுவனங்களுக்கும் ஓபரா இசைக் கோவையை எழுதினார்.
பிரெஞ்சு மொழியில் அவர் எழுதிய ‘தராரே’ எனும் ஓபரா அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1804-ல் தனது கடைசி ஓபராவை எழுதினார். அதன்பின்னர், இறைப்பணி சார்ந்த இசைக் கோவைகளை உருவாக்குவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
தன்னை விட இளையவரான மொஸார்ட்டின் இசைக்கு இருந்த வரவேற்பால் அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்தார் எனும் அளவுக்குப் பல புனைவுகள் அவரைப் பற்றி உண்டு. அதே சமயம், அவருக்கும் மொஸார்ட்டுக்கும் இடையில் ‘சக அலுவலக ஊழியர்களுக்கு இடையிலான பிணக்கு’ மாதிரியான பிரச்சினைகள் இருந்தது உண்மைதான் என்றும் தனது காலத்திலேயே தனது இசைப் புகழை இழந்தது அவரை வருத்தியது உண்மைதான் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சர் பீட்டர் லெவின் ஷாஃபர் எனும் ஆங்கில நாடக ஆசிரியர் எழுதிய ‘அமேடியஸ்’ (1979) எனும் நாடகத்தில் மொஸார்ட்டுக்கும் சலியேரிக்கும் இடையிலான பிரச்சினை கற்பனையாகச் சித்தரிக்கப்பட்டது. இந்நாடகத்தை அடிப்படையாக வைத்து 1984-ல் இதே பெயரில் வெளியான திரைப்படம் உலகத் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்படும் படைப்பு. ஆனால், இந்த இரு படைப்புகளிலும் பெருமளவு புனைவுதான் இருந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும் இந்தப் புனைவுகளால் நன்மைகளும் ஏற்பட்டன. அவரது இசை தொடர்பான ஆய்வுகள் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்டன. அவரது இசைக் கோவைகளை இசைத்துப் பதிவுசெய்து ஆய்வுசெய்துவருகிறார்கள் தற்கால இசை மேதைகள்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago