ட்வீட்டாம்லேட்: கருணாநிதியை இவங்களுக்கு ஏன் பிடிக்கும்?

By க.பத்மப்ரியா

ஆட்சியில் இருக்கும்போதும் இல்லாதபோதும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் தலைவர்களில் முதன்மை வகிப்பவர் கருணாநிதி. சமூக ஊடகங்களிலும் இதே நிலைதான் என்பது அவ்வப்போது கண்கூடாகப் பார்க்க முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் இன்று >#WhyILikeMK என்ற ஹேஷ்டேக்கில் கொட்டப்பட்ட நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள். அவற்றில் சில...

தம்பியான் ‏@k_for_krish - என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என்ற வார்த்தை இவரை தவிர யார் சொன்னாலும் அவ்வளவு உயிர்ப்போடு இருக்காது. #whyilikemk

புகழ் @mekalapugazh - தமிழறிவு, வள்ளுவன் புகழ், உயர்த்திப்பிடிக்கும் குணம், குறளோவியம், பராசக்தி, எழுத்தாளராய் ஒரு அரசியல் தலைவர், அசாத்திய ஞாபகத் திறன், பேச்சாற்றல், பெரியார்...அண்ணா...வரிசையில் கடைசித் தலைவர்....#WhyILikeMK

அழகிய தமிழ் மகன் ‏@kaviintamizh - சுயநலத்தையே பொது நலம் என பிறரை நம்பவைக்கும் திறமை தான். #WhyILikeMK

சீனிவாசன் ‏@yendrumdravidan - தங்களை திருநங்கை என்று குறிப்பிட்டுக்கொள்வதில் அந்த இனமே விரும்பும்படியாக, திருநங்கை என்ற பெயர் வைத்தார்... உழவர் சந்தை, உள்கட்டமைப்பு #WhyILikeMK.

சுரேஷ் சந்திரன் ‏@sureshrcs - ஒரு கேள்விக்கு இரு அர்த்தமுள்ள பதில் தரும், இவர் போல் ஒரு தலைவன் தமிழகத்திற்கு இனி கிடைக்க போவதில்லை #WhyILikeMK

Sri Sri Sri Sri Ravi ‏@senthazalravi - #WhyILikeMK திருநங்கை. மாற்றுத்திறனாளி. கைம்பெண். வார்த்தைகளை அரசு ஆணைகளாக்கி உணர்வுகளை சட்டமாக்கியவர். தனிவாரியம் தந்தவர்.

Selva/வினையூக்கி ‏@vinaiooki - அவரின் ஆட்சிக்காலத்தில் கூட #WhyIhateMK என்று பக்கம் பக்கமாய் கட்டுரை எழுத சுதந்திரமுண்டு.

நர்சிம் ‏@narsimp - ஒரு ட்விட்டில் சொல்லிவிடக்கூடியவையா? #WhyILikeMK.

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - எரிச்சல் தரும் கேள்விக்கும் எகத்தாளமாய் பதில் தரும் டைமிங் சென்ஸ்!#WhyILikeMK.

சௌம்யா ‏@arattaigirl - அந்தக் குரல் #WhyILikeMK.

திரு ‏@thirumarant - முதல் முறை முதல்வர் ஆகப்போவது போல் இன்னும் அந்த நாற்காலி மேல் அதே ஈர்ப்புடன் இருப்பதால்... #WhyILikeMK.

நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan - 90+ வயசுலயும் அசராமல் விளையாடும் அவரின் தமிழ் ஆளுமை...!! #WhyILikeMK.

மாஸ் சேட்டு ‏@SettuOfficial - ADMK உருவாகவும், DMK அழியவும் கருணாநிதி மட்டுமே காரணம்.. #whyilikeMK..

த.கணேசன் ‏@imdganesan - அண்ணா நூற்றாண்டு நூலகம் #whyilikemk.

ஆழ்வார்க்கடியான் ‏@Tamilblr - தமிழுக்கு சிலை, தமிழன் உயிருக்கு உலை #WhyILikeMK.

Ashraf ‏@_Ash_raf 2 - தமிழகத்துக்கு 108-ஐ அறிமுகப்படுத்தியதால் #WhyILikeMK.

விஜய் ‏@toviji 2 - பள்ளிக் கல்வியை தாண்டாது பல சங்க இலக்கியங்களை படைத்ததால் #WhyILikeMK.

ஆல்தோட்டபூபதி ‏@thoatta - கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்ததால் #WhyILikeMK & ஒரு மணி நேர உண்ணாவிரதம் #WhyIhateMK.

பிராக்கு பார்ப்பவன் ‏@suganthanp - குடும்பத்துக்கு முக்கியத்துவம் தந்ததால் #WhyILikeMK.

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - கலாய்க்கலாம்னு ஆரம்பிச்ச டேக் போல! ஆனா பாராட்டுறது தான் ரொம்ப இருக்கு!#WhyILikeMK.

செல்va ‏@imw84u - #WhyIlikeMK இதுல இருக்க ட்வீட் & ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்தா கருணாநிதியை புகழ்ரானுங்களா இல்ல கலாய்குரானுங்களானே தெரியல.

நிலாவன் ‏@nilaavan: பேச்சுக்காகவே கூடும் கூட்டம்; அதைக் கட்டிப்போடும் லாவகம்... #WhyILikeMK

Selva Prasad ‏@selvaprasad_vs: மல்டி நேஷனல் கம்பெனிகள் சென்னைக்கு வருவதற்கும்... 5 லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும் காரணமாய் இருந்தவர்... #WhyILikeMK

CrAzY boy THANUSH ‏@CrAzYboyTHANUSH: மிகச் சிறந்த தலைவர் என்பதைவிட... மிகச் சிறந்த தந்தை... #WhyILikeMK

ஃபேஸ்புக்கில்...

Thadagam Mugund: ஏன்னா அவரு கலைஞர் #‎WhyIlikeMK‬

Rajarajan RJ: நான் ஆறாம் வகுப்பு படித்த போது, எட்டாம் வகுப்பு வரை இலவச பஸ் பாஸ் அறிவித்தார். எட்டாம் வகுப்பு போன போது, அது 12 வகுப்பு வரை நீட்டிக்கபட்டது! #‎WhyILikeMK‬

பிரபல எழுத்தாளர்: மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என எழவு வீட்டிலும் எதுகை மோனையில் விளையாடிய முத்தமிழே!. ‪#‎WhyILikeMK‬

இலக்கியம் படிக்காதவன்: ஆபிஸ் அரசியலையே நம்மால தாக்கு பிடிக்க முடிய மாட்டேங்குது. இந்த வயசுலையும் தலைவரு அரசியல் பண்ணுற விதத்தை பார்த்தா ஆச்சரியமாத் தான் இருக்கு ‪#‎whyILikeMK‬

Kirthika Tharan: இந்தியக் கலாச்சாரத்தில் குடும்பம் எவ்ளோ முக்கியம் என்று உணர்த்தியதால்.. #‎whyilikemk‬

கவிப்பேரரசு. நாஞ்சில்: என்னய்யா எல்லாரும் ‪#‎WhyILikeMKன்னு‬ கிளம்பிட்டீங்க? சரி நானும் சொல்லிக்கறேன்... என்னதான் கலாய்ச்சாலும் கழுவி ஊத்துனாலும், கிட்டத்தட்ட அறுபது வருஷமா, தமிழக அரசியலின் தவிர்க்கவே முடியாத முகமாக இருப்பதால் ‪#‎WhyILikeMK‬...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்