எதோ ஒரு தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் இருக்கும் தொலைக்காட்சியைப் பார்க்க அடித்து பிடித்து இடம் போட்டு படங்களை பார்த்த 80-களின் நினைவுகளை நினைவூட்டும் வகையில் #80sTamilCinema என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் ட்வீட்டாளர்கள் மிகவும் ருசிகரமாக 80-களில் வெளியான சினிமாக்களில் பார்த்து வியப்படைந்த தங்களது நினைவுக் குறிப்புகளை கொட்டி வருகின்றனர். இன்றைய ட்வீட்டாம்லேட்டில் 80-களின் நினைவுகள்...
இளையகாஞ்சி @ilayakaanchi - ஹீரோயின் வில்லன பாத்துட்டு.. வாய்மேல கைவச்சி..300டெசிபல்ல கத்துவாங்க..#80sTamilCinema.
வெட்டுப்புலி @Meeran8787 - இப்படியே ஆள் ஆளுக்கு பேசாம இருந்த எப்டி பஞ்சயத்ல ஒருத்தன் முதல்ல பேசுவான் #80sTamilCinema.
ச ப் பா ணி @manipmp - உதட்டில ரத்தம் வந்தா தான் திருப்பி அடிப்பாங்க ஹீரோஸ் #80sTamilCinema.
குணா யோகச்செல்வன் @g4gunaa - மலைப்பாதைல காரோ.. ஜீப்போ போனா கண்டிப்பா ரேடியேட்டர்ல தண்ணி தீர்ந்துடும்! #80sTamilCinema tamil.
ஆல்தோட்டபூபதி @thoatta - உப்புமா செய்யனும் ரவை வாங்கிட்டு வாடான்னு ஹீரோவோட அம்மா சொன்னாக்கூட, 'உன் ஆசைய நிறைவேத்தறேம்மா'ன்னு தான் போவானுங்க #80sTamilCinema.
அனாமிகா @MissLoochu - மோகன் பாட நதியா ஆட விசு விளக்கம் தர மனோரமா சிரிக்க நாட்டாம தீர்ப்புகூற கவுண்டர் செந்தில எட்டி உதைக்க ஒரே காமெடிதான் போங்க #80sTamilCinema.
இளநி வியாபாரி @MrElani - காட்டு பங்களா #80sTamilcinema.
ட்விட்டர்MGR @RavikumarMGR - க்ளைமேக்ஸ்ல க்ரூப் போட்டோ எடுக்குறப்ப யாராவது மொக்கை போடுவாங்க உடனே எல்லாரும் சிரிக்க..சுபம்!#80sTamilcinema.
மாஸ் காதர் @MoideenKadhar - இப்ப உள்ளவங்க என்ன சண்டை போடுறாங்க..எங்க அண்ணன் ராஜ்கிரண் சண்டைக்கு ஈடாகுமா..எலும்பு உடையும்லே #80sTamilCinema.
c.gurumoorthy @karunaiimalar @sivaaa_twits - மாதுரி மாதவி எங்களின் எழுச்சி நாயகி "சில்க் ஸ்மிதா" அனைவரும் அழகு.
ச ப் பா ணி @manipmp - சத்யராஜுக்கு மத்தியானம் ஒரு மணிக்கு ரேப் சீன் கொடுத்திருப்பாங்க #80sTamilCinema.
எழுத்தாளன்® @WriterAzar - இளையராஜாவினால் மட்டுமே வெற்றி கண்ட பல நூற்று படங்கள்!!!☺️☺️#80sTamilCinema
Rajesh R Rajasekar @ahsuna007 - கிராமத்து சப்ஜெக்ட் படம்னா கண்டிப்பா ஆலமரம் வந்துரும்,blouse போடாம 4 ஆயா வந்துருவாங்க #80sTamilCinema.
மாஸ் காதர் @MoideenKadhar - ராமராஜன மென்சன் பண்ணாம இந்த டேக் முழுமை பெறாது.. #80sTamilCinema.
⇝அருண் குமார்⇜ @Arun_Rangiem - பண்ணையார் வீட்டு பொண்ணுங்க பால்காரன பயங்கரமா லவ் பண்ணுவாங்க#80sTamilCinema.
நாகராஜசோழன் @kandaknd - காந்திமதி யின் பொன் மொழிகள்! மண்ணெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண #80sTamilCinema.
அருண் குமார்⇜ @Arun_Rangiem - ஒரு புலி போட்டோ, ஒரு மான் போட்டோ..மாத்தி மாத்தி காட்டுனா பயங்கரமான ரேப் நடக்குதுனு அர்த்தம் #80sTamilCinema.
திருச்சி மன்னாரு @TrichyMannaru - ஹீரோ ஹீரோயின் முகத்த பாத்து பேச மாட்டாங்க. ஹீரோ ஃபேன பாத்து பேசுவாரு ஹீரோயின் ஜன்னல் பாத்து பேசும் #80sTamilCinema #கோபால்.
✍ரைட்டர் பச்சப்புள்ள @sivaaa_twits - ரேப்சீன்ல வில்லன் ஈரோயினி ட்ரெஸ நாலுமணி நேரமா போராடி லைட்டா கிழிச்சி வெச்சிருப்பான்.. ஈரோ வந்து சட்டைய கழட்டிக்குடுப்பாரு.
Gowthamvpm @globetricks - இடி இடிச்சாலோ, கரப்பான் பூச்சியைப் பார்த்தாலோ ஹீரோயின் கரெக்டா ஹீரோவை தான் கட்டிபிடிப்பாங்க .உடனே லவ் வரும் #80stamilcinema.
குறும்புக்காரன் @kurumbukaran - எல்லா பெண்களும் கமல் ரசிகைகள்.
ஜூனியர் ஓல்ட்மாங்க் @jroldmonk - no vacancy வேலை காலியில்லை #80sTamilCinema.
திருச்சி மன்னாரு @TrichyMannaru - உடம்புல எந்த இடத்துல குண்டு பாஞ்சாலும் ஹூரோ வெங்காயம் அறுக்கும் கத்தியை வச்சு குண்ட வெளிய எடுத்து ப்ளாஸ்த்ரி போட்டுக்குவாறு #80sTamilCinema
கூமுட்டை @kuumuttai - ரெண்டு பூவும் உரசிக்கொண்டால்... அவுங்கவுங்க கற்பனையை யூஸ் பண்ணிக்கோங்க... #80sTamilcinema.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago