சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 42–வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை தற்காலிக மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.
விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் முதல் முறையாக 2013-ல் விழத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று வரை கண்ணாடிகள், கிரானைட் கற்கள், லிஃப்ட் கண்ணாடிகள், மேற்கூரை கண்ணாடிகள், ஃபால்ஸ் சீலிங் வகையிலான மேற்கூரை என அடிக்கடி உடைந்து விழுவது வழக்கமாகி வருகிறது.
இதனால் இதுவரை பலர் காயமடைந்தும் உள்ளனர். அடிக்கடி உடைந்த பகுதிகள் பழுது பார்க்கவும்படுகிறது. இருப்பினும் விபத்துகள் தொடர்கதையாகத் தான் இருக்கிறது.
சென்னை விமான நிலையம் என்றால், அங்கே ஏதேனும் உடைந்து விழாமல் இருந்தால்தான் செய்தி என்ற அளவுக்கு இந்த விபத்துகள் மிக சாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவது தொடர்பாக ட்விட்டர்வாசிகள் அவ்வப்போது பதிவுகள் இட்டு வருகிறார்கள். அதன் தொகுப்பு இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
Pragadeesh Mannai @Pragadeesh_G - கூரையில்லா விமான நிலையம் என்ற பெருமையை சென்னை விமான நிலையத்துக்கே குடுக்கலாம்..., ஹய்யோ ஹய்யோ
Kuttybalaji @balaji4165 - திடீர் திடீர்னு உடையுதாம் ஒழுகுதாம் ஆனா இன்னும் யார் தலையிலையும் விழலையாம் #சென்னை_ஏர்போர்ட்
சிநேகமுடன் சிவா @shivafreedom - 41 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் விபத்து, எல்லா ஊர்லேயும் பிளைட் தான் கீழே விழும் ஆனா இங்க ஏர்போர்ட்டே கீழே இடிஞ்சி விழுது.
ஊரோடி™ @RaguC - ஆளுக்கு ஒரு இரும்புக் குடை கொடுத்தா நல்லாருக்கும், எப்ப பிஞ்சு விழும்னு கூரைய பாத்துட்டு நிக்க வேண்டியாதா இருக்கு. சென்னை ஏர்போர்ட் திகில்.
நாடோடி மாம்ஸ் @kkarthic - இடிஞ்சி எதுவும் விழலை இதுவரை!! ஆமா சென்னை ஏர்போர்ட்ல தான் இருக்கேன். ;-))
ரோபோ ரோமியோ @abdul_civil - சென்னை ஏர்போர்ட் 40 வது முறையாக கண்ணாடி விழுந்து சாதனை. 100 தடவை விழுந்து உலகப் புகழ் பெற வாழ்த்தும் அண்ணனின் அடி விழுதுகள்.
Dinesh Kumar @DinuVj - இந்நேரம் நம்ம ஏர்போர்ட் நாராயணசாமி இருந்திருந்தா, அடிக்கடி உடைந்து விழுகும் சென்னை ஏர்போர்ட் மேற்கூரையை 15 நாளில் சரி செஞ்சிருப்பார்.
பட்டிகாட்டு வாயாடி @pattikaduu - 39வது தடவையா சென்னை ஏர்போர்ட் கண்ணாடிவிழுந்து உடஞ்சிருச்சாம். ஒரு வேலை உடைஞ்ச கண்ணாடியவே திரும்பத் திரும்ப பசை போட்டு ஒட்ட வைக்குராங்களோ.
பிரகாஷ் @PrakashMahadev - சென்னை விமான நிலையத்தில் 39வது விபத்து: கண்ணாடி கதவு உடைந்து ஊழியர் காயம் # விமானத்துல போனா காணாம போயிடுது .. ஏர்போர்ட் போனா விபத்து ஆகிடுது.
நாகராஜசோழன் @kandaknd - உலகத்துலயே பணக்கார ஏர்போர்ட் சென்னை ஏர்போர்ட்டுதான் கூரை எத்தனை தடவ இடிஞ்சு விழுந்ததுனு எண்ணி சொல்ல ஒரு ஆளை வேலைக்கு வச்சிருக்காங்கனா பாருங்க.
வீம்பு @kadivaalam - சென்னை ஏர்போர்ட் மீண்டும் ஒரு கண்ணாடிக்கதவு உடைந்தது#செய்தி#இனிமே 'இன்று கண்ணாடிக் கதவு உடையவில்லை' ன்னு செய்தி வந்தாதான் அதிசயம்.
வெங்கடேஷ் ஆறுமுகம் @venkatapy - விடுப்பா... விடுப்பா... மனைவின்னா எரிஞ்சு விழறதும் ஏர்போர்ட் கூரைன்னா இடிஞ்சு விழுறதும் சகஜம் தானே.
பாரதி @BharathiBigB - மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல மறுபடியும் ஏதோ விழுந்து தொலஞ்சிடுச்சாமே :(( பேசாம அந்த கான்ட்ராக்ட்ட நாம எடுத்தா நல்ல வருமானம் கிடைக்கும் போலயே :))
முனிஸ்காந்த் @smartsuruli - நெசமா அது சென்னை விமான நிலையம்தானா இல்ல சங்கர் படத்துக்கு போட்ட செட்டா??? #திடிர் திடிர்னு சாயுதாம்
சிங்கார வேலன் @AnishBon - சென்னை விமான நிலையம் இன்னும் இடியுமாம், பேய் இருக்காம்,, பிசாசு இருக்காம்,,கிளப்பி விட்டுருவோம்!!
அகராதி No.1 @mp_samy - கவனிச்சீங்களா...சென்னை விமானநிலைய மேற்கூரை விழும்போதெல்லாம் ஒண்ணு ப்ளைட் விபத்துக்குள்ளாகுது இல்லீனா காணாமப்போகுது #something wrong
cjramki @cjramki - 7000 வருஷத்துக்கு முன்னாடியே விமானம் இருந்துதாமே!!! அப்போ சென்னை விமான நிலையமும் அப்போ கட்டினதா இருக்குமோ?
kannadasan velu @dasan15689 - உலக சாதனைப் பட்டியலில் சேர இன்னும் சில எண்ணிக்கைகள் மட்டுமே உள்ளன..... வாழ்த்துக்கள்...சென்னை விமான நிலையம் கண்ணாடி உடைந்தது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago