ட்வீட்டாம்லேட்: புத்தக காதலை பிரசுரித்த பதிவர்கள்

By க.பத்மப்ரியா

இன்று - ஏப்.23: உலக புத்தக தினம். உலகையே தங்களது எழுத்துக்களால் கட்டிப்போட்ட தலைசிறந்த எழுத்தாளர்களின் நினைவாக இந்தத் தினத்தை புத்தகத்துக்கான நாளாக யுனெஸ்கோ அறிவித்தது.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தருணத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் வாசிப்பு மீதான ஈர்ப்பு குறைந்திருப்பது கசப்பான உண்மையாக இருந்தாலும், இந்தத் தினத்தில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தையும் விவாதங்களை முன்னெடுத்த ட்வீட் ஆர்வலர்களின் கருத்துக்கள் இன்றைய ட்வீட்டாம்லெட்டில்...

GOPALA KRISHNAN ‏@kgkrishn - புத்தகங்களுக்கான சரியான விலையை நிர்ணயிக்க முடியாததே புத்தக விற்பனை குறைவுக்கான காரணம். #உலகபுத்தகதினம்.

செங்காந்தள் ‏@kumarfaculty - "கிழிந்த எண்ணங்களை நல்ல நூல்களால் தைப்போம்". இன்று (23.4.15) உலக புத்தக தினம்.

Ramar...உசிலம்பட்டி ‏@ram89prabhakar - எத்தனையோ சரிவுகளுக்குப் பின்னும் தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் வாழ்க்கை புத்தகம் வேறு இல்லை.

புகழ் ‏@mekalapugazh - உலகப் புத்தக தின வாழ்த்து இணையத்தில் சொல்லுவதென்பது...குழந்தையைக் கிள்ளித் தொட்டில் ஆட்டுவது...

கதிரேஸ்ஸ்ஸ் ‏@KathirayZ - சாருநிவேதிதா சமையல் குறிப்புகள் மட்டுமே அடங்கிய புத்தகம் ஒன்று எழுதலாம். அப்படி எழுதினா அதான் அடுத்த வருடம் டாப் செல்லர்ல இருக்கும்.

நாம் புரட்டுவது இல்லை நம்மை புரட்டுவதே சிறந்த புத்தகம்.. #புத்தகதினம்.

இரண்டாம்துக்ளக் ‏@2amtughluq - புத் அகம் #அதாவது படிக்க படிக்க இதயம் மனது புத்துணர்ச்சி ,புதிதாக ,மாறும் #புத்தகம் #நாங்களும் சொல்வோம்ல.

சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - என்னை நானே மதிக்கும் அளவில் என் சிந்தையும் செயலும் இருக்கிறதெனில் அதற்கு ஒற்றைக் காரணம் என் வாசிப்பு தான். உலக புத்தக தின வாழ்த்துக்கள்.

அபிசேக் மியாவ் ‏@sheiksikkanthar - ஒரு ஏழை மகனுக்கு நல்ல புத்தகம் தேவையில்லை. அப்பாவின் கஷ்டமான வாழ்க்கை அனுபவம் என்ற புத்தகம் ஒன்றே போதும் வாழ்வதற்க்கு.

சப்பாணி ‏@manipmp - புத்தகத்தைத் திருடுங்கள்.ஏனெனில் புத்தகம் திருடுவது வெண்ணெயைத் திருடுவதை விட புனிதமானது #உலக புத்தக தினம்

றிசா - கைப்பிடித்து கூட்டிச் செல்லும் என் நண்பனின் தினம் இன்று. ‪#‎புத்தகம்‬.

தூரிகை ‏@barathi - எனக்குத் தெரிஞ்ச ஒரே தியான முறை - புத்தகம் படித்தல் #உலகபுத்தகதினம்.

சிநேகமுடன் சிவா ‏@shivafreedom - குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேறேதுமில்லை.....!!!!

டிடோட்ளர் ‏@sudhansts - எத்தன புக்கு வந்தாலும் இத அடிச்சுக்க முடியாது...*30 நாட்களில் ஆங்கிலம், ஹிந்தி கற்க உதவும் அறிய புத்தகம் # புத்தக தின வாழ்த்துகள்.

பைங்கிளி ‏@parrot_speaks - கண்விழித்துக் கொண்டே உறங்கிக் கொண்டிருக்கிறேன் உன்னை பார்க்கும் போதெல்லாம். #புத்தகம்.

எழுத்தாளன்® ‏@WriterAzar - நிறைய புத்தகம் கையில் ஆனால் குறைவான நேரம் படிப்பதற்கு!!

டுவிட்டர் அரசன் ‏@thamizhinii - ஒரே நாளில் எப்படி 1000 பாலோயர்ஸ் சேர்த்து பிரபலமாவது என்று ஒரு ரகசிய புத்தகம் வச்சிருக்கேன் வேண்டும் எனில் என்னை பாலோ பண்ணுங்க சொல்றேன்!

கில்லி மனோ ‏@Tweets_4rm_MaNo - ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகம் தர முடியாத தைரியத்தை..,நண்பனின் ' விடு மச்சி 'பாத்துக்கலாம் என்னும் வார்த்தை தந்து விடும்.

அழகிய தமிழ் மகன் ‏@kaviintamizh - எழுதியதை புத்தகமாய் பதிப்பித்தவர் எல்லாம் எழுத்தாளனும் அல்ல.. எழுத்தாளர் எல்லாரும் அறிவாளியும் அல்ல...

ஏபிடி ரசிகன் ‏@Thilip53 - உன் வாழ்க்கை ஒரு புத்தகம் அனைத்துப் பக்கத்திலும் ஒரு பொருள் இருக்கும் அதை சரியாக செயல்படுத்த தெரிந்தால் உன் புத்தகம் நூலகத்தில் வைக்கப்படும்.

Kavitha Lakshmi - தலை குனிந்து என்னைப் பார்....தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன்....!!! ‪#‎புத்தகம்‬.

ஹரி குணா - ஆழ்ந்து படிப்போர்க்கு"ஊக்க மருந்து", மேலோட்டமாக படிப்போர்க்கு "தூக்க மருந்து"..! ‪#‎புத்தகம்‬.

rOmiYO ‏@killernajath1 - தோல்வி ஒரு பாடப்புத்தகம் அதை படித்துக்கொண்டால் வெற்றியே உன் கடைசிப்பக்கம்.

Abdul kathar ‏@AkKathar - தந்தையை மிஞ்சிய #புத்தகம் இல்லை #WorldBookDay.

ஓவியச்சாரல் ‏@oviyachaaral - 'நூல்' போல் நம்மைப் பிணைத்து வைக்கும் புத்தகங்கள் சாரா வாழ்வு வெறுமை தான். தேர்ந்து, கற்போம். கற்று, தேர்வோம். #உலகபுத்தகதினம் #WorldBookDay.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்