அட்சய என்றால் வளர்தல் என்று பொருள். அள்ள அள்ளக் குறையாத செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். தங்கம், வெள்ளி போன்ற பொருளாதார வளத்தைக் குறிக்கும் பொருட்கள் சேர வேண்டும் என்றால் அட்சய திருதியை நாளில் வாங்கினால் வளமுடைய வாழ்வைப் பெறலாம் என்பது ஐதீகம்.
இந்த ஐதீகத்தையும் விடவில்லை நம் ட்விட்டர் சமூகம். இன்று ஒரு ட்வீட் போட்டால் ரீ-டீவீட் பெருகும் என்று ஐதீகத்தில் புதிய கோட்பாடுகளைப் புகுத்தி, தங்களுக்கே உரிய மொழிநடையில் இட்ட பதிவுகளின் தொகுப்பு - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்.
ஃபீனிக்ஸ் तिरु @fanatic_twitt - அட்சய திரிதியை அன்று நகைதான் எடுக்கணும் அவசியம் இல்லை. அரிசி, காய்கறி, பணம் முதலிடு, புதுகணக்கு போன்றவற்றை செய்யலாம்.
குட்டன்ஸ் @mani_kuttans - இன்று ஜுவல்லரி செல்வோரை பார்க்கும் போது மஞ்ச தண்ணி தெளித்த ஆடு போல தெரிகிறார்கள்.
துப்பாக்கி @cbe_007 - அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கி, அது பொங்கு பொங்கென்று பொங்கி உலகபெரும் கோடீஸ்வரிகளாகவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
குட்டி தல @sundarvh - அட்சய திருதியைக்கு விவசாயம் பண்ணுங்க... அதுவாவது பெருகுதா என்று பார்ப்போம்.
நா.குமரேசன் @kumaresann45 - அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினா சேரும்னு நகை வாங்கினேன், சொன்ன மாதிரியே சேர்ந்தது சேட்டு கடையில!!
ட்விட்டர் Newton @twittornewton - ஆசை எல்லாருக்கும் உண்டு. ஆசைகள் கூடக்கூட ஆத்திக முறைகள் கூடிக்கொண்டு வருகின்றன என்பதற்கு எ.கா: #அட்சய திருதியை
KarnanMariyappan @DoctorKarnan - கடன் வாங்கி நகை வாங்கி கடன்காரன்கிட்ட பேச்சு வாங்கி அவமானம் பெருகுவதைவிட, நாலு ஏழைங்களுக்கு சோறுபோட்டு மனநிறைவப் பெருக்குங்க டோலர்ஸ்!
Sundari @natpudan_guna - அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கினா தங்கம் சேரும்னா ௭துக்கு தங்கம் விக்கிறான்
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams - செய்யப்படும் தானதர்மத்தின் புண்ணியபலன்கள் பல மடங்காகும் என்பதே அட்சய திருதியை தினம். இதனை வியாபாரிகள் "திருத்தி"ய விதம் "நகை"ப்பிற்குரியது
தமிழ் குமரன் @YarlKumaran - ராசியான எங்கள் கடையில் அட்சய திருதியைக்கு நகை வாங்குங்கள் அடுத்தநாளே அவசரத்துக்கு அடகு வையுங்கள்!
மன்னார் @OnlyMannar - #அட்சய_திருதியை நாள்ல கவரிங் நகை வாங்கினா இரட்டிப்பாகும்தானே? இருக்கிறவங்களுக்கு கல்யாண் ஜுவல்லரி, இல்லாதவங்களுக்கு கல்யாணி கவரிங் தானே!
#அட்சயதிருதியைஅன்னைக்கு_இதைச்சொல்லணும்ன்னுதோனுச்சு_சொல்லிட்டேன்!
பிரகாஷ் @PrakashMahadev - நாளை அட்சய திரிதியை # புதுசா நகை எதுவும் வாங்காம எப்பவும் போல உங்க வேலையை ஒழுங்கா பாருங்க செல்வம் குவியுதோ இல்லையோ கரையாம இருக்கும்
Gokila @gokila_honey - என் அம்மா ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தங்கம் வாங்கிட்டு தான் இருக்காங்க. ஆனா அந்த நகைக்கடை மட்டும் தான் வருசா வருஷம் டெவெலப் ஆயிட்டே போது.
சவுந்தரராஜன் @sundararajan - தாலி அவிழ்ப்பை விட "நகை அவிழ்ப்பு" விழிப்புணர்வு நடத்தி அட்சய திரிதியை மூட நம்பிக்கையின் தாக்குதலில் இருந்து கணவன்மார்களை காக்கலாம்!
மர்ஹபா™ (வலி Jee) @coolguyvali - அம்மாவுக்கு மட்டும் அட்சய திரிதியை என்பது ஞாயிறு, திங்கள் போல சாதரண நாளே # எனக்கெதுக்குடா தங்கம் உன் செலவுக்கு வச்சுக்க: புனித உறவு அம்மா!.
சிந்து Talks © @sindhutalks - அட்சய திரிதியை அன்னைக்கு RT பண்ணுனா.. வருஷம் முழுக்க RT பெருகும்கறது ஐ(டி)தீகம்..
த ங் க ச் சி ™ - @paasakkaari - அட்சய திரிதியை அன்று நகை வாங்குபவர்களுக்கு செல்வம் செழிக்கும் என்றால், அன்று நகை விற்றவர்கள் இந்நேரம் பிச்சைக்காரனாய் அல்லவா ஆகியிருக்கணும்.
எமகாதகன் @Aathithamilan - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாட முடியவில்லை என்றாலும் தெரிந்து வைத்துள்ள ஏழைகளுக்கு அட்சய திரிதியை என்பது என்னவென்றே தெரியாது.
கிராஸ் Talk @CrazeTalk - அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வாழ்க்கை செழிப்பாக அமையும் என்று கடன்பட்டாவது தங்கம் வாங்க போகும் அவர்களுக்காக 2 நிமிடங்கள் மௌனம்
புத்திகாலி @Tottodaing - மயிலிறகு குட்டிபோடும்னு நம்புற மாதிரிதான், அட்சயதிரிதியைக்கு வாங்குன தங்கம் பெருகும்னு நம்புறதும்!
ஜீவா @_nallavan - அட்சய திருதியை அன்னிக்கு, யாருக்காவது இலவசமா 1 கிராம் தங்கம் கொடுக்கனும்னு சொன்னால், அன்றே அது மூடநம்பிக்கையின் பட்டியலில் போய்ச்சேரும்.
பாரதி @BharathiBigB - ஏப்ரல் ஃபூல்களிலேயே ஆகச்சிறந்தது அட்சயதிருதியையன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதுதான்
RajaR @Rajarath - அட்சய திருதியைக்குலான் இன்னும் தலைவர்கள் வாழ்த்து சொல்ல ஆரம்பிக்கலியா....
BabyPriya @urs_priya - தங்கம் வாங்கறத பத்தி டவீட் போட்டு இல்ல அந்த டாபிக்ல உள்ள ட்விட்ட ஆர்டி பண்ணி இன்றைய அட்சய திருதியை சிறப்பாக கொண்டாடப்படும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago