கீமோதெரபிஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ஹோக்வியம் என்ற பகுதியில் (1905) பிறந்தவர். கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கிய இவரது தாத்தாவைப் பின்தொடர்ந்து தந்தையும் அதே களத்தில் முத்திரை பதித்தார்.
l தந்தையின் பணி காரணமாக இவர், அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வளர்ந் தார். சியாட்டிலில் உள்ள ஃபிராங்க்ளின் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
l இவரது 12-வது வயதில் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தது இவருக்குள் ஆழமான பாதிப்பை உண்டாக்கியது. மருத்துவம் படிக்கவேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தியது. அதற்கேற்பவே தன் பாடங்கள், ஆய்வுக்கான விஷயங்களைத் தேர்ந்தெடுத்தார்.
l வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 1927-ல் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் அதே பல்கலை.யின் உயிரியல் நிலையத்தில் பணியாற்றினார். அங்கு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதுநிலைப் பட்டம் பெற்றார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை ஆசிரியராக சேர்ந்தார்.
l பிறகு ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் உயிரியல் ரசாயனத் துறை ஆசிரியராகப் பணியாற்றினார். 1933-ல் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்த 10 ஆண்டுகள் ஹார்வர்டிலும், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார்.
‘வெல்கம்’ ஆய்வுக்கூடத்தின் உயிரி வேதியியல் துறையில் 1942-ல் பணிபுரிந்தார். 1944-ல் அங்கு மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 2,6-டைஅமினோப்யூரின் மற்றும் பி-குளோரோ ஃபீனாக்ஸி டைஅமினோ பைரிமிடின் உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சியில் ஹிட்சிங்ஸ் தலைமையிலான குழு ஈடுபட்டது.
l கீமோதெரபிக்கான மருந்துப் பொருட்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான முக்கிய கோட்பாடுகளை இக்குழு வெளியிட்டது. இந்த கோட்பாடுகளை கண்டறிந்ததற்காக ஹிட்சிங்ஸ், சர் ஜேம்ஸ் பிளாக், கெர்ட்ரூட் எலியான் ஆகியோருக்கு கூட்டாக 1988-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஹிட்சிங்ஸின் கீமோதெரபி குறித்த ஆராய்ச்சிதான் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்க காரணமாக அமைந்தது. இதன்மூலம் ஹிட்சிங்ஸ் மேலும் புகழ்பெற்றார்.
l பரோஸ் வெல்கம் ஆராய்ச்சி அமைப்பின் துணைத் தலைவராக 1967-ல் பதவி ஏற்றார். ட்யூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். உயிரி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட பரோஸ் வெல்கம் நிதி அமைப்பின் இயக்குநர், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
l அமெரிக்காவில் மருத்துவ வேதியியல் துறையில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அரங்கிலும் இவரது பெயர் இடம்பிடித்தது. பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, பல பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தினார்.
l 20 ஆண்டுகளுக்கு மேல் தன் வாழ்வை பொது நலன்களுக்காக அர்ப்பணித்தவர். மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் மனிதகுல நலனுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 93 வயதில் (1998) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago