இந்திய ராணுவ வரலாற்றில் சாதனை படைத்த ‘பீல்டு மார்ஷல்’ சாம் மானெக்ஷா (Sam Manekshaw) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் (1914) பிறந்தவர். இவரது முழு பெயர், சாம் ஹோர்மூஸ்ஜி பிரேம்ஜி சாம்பகதூர் ஜம்ஷெட்ஜி மானெக்ஷா.
தந்தைபோல மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால், இங்கிலாந்து சென்று படிக்க வீட்டில் அனுமதிக்கவில்லை. கோபம் கொண்டு, டேராடூன் ராணுவக் கல்லூரிக்கு விண்ணப் பித்தார். முதன்முதலாக அந்த ராணுவப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் இவரும் ஒருவர். 1934-ல் ராணுவ சேவையைத் தொடங்கினார்.
பர்மாவில் 1942-ல் பணியாற்றியபோது 2-ம் உலகப் போர் மூண்டது. ஜப்பானின் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடிய இவரது உடலில் 9 குண்டுகள் பாய்ந்தன. படுகாயம் அடைந்தபோதும் தொடர்ந்து போராடி, போர்முனையைக் கைப்பற்றும் முயற்சியில் வெற்றிகண்டார். இவரை பாராட்டி பிரிட்டிஷ் இந்திய ராணுவத் தளபதி டி.டீ.கோவன், தனது மிலிட்டரி கிராஸ் பதக்கத்தை கழற்றி போர்முனையிலேயே இவருக்கு அணிவித்தார்.
உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். வீரர்கள் இவரை ‘சாம் பகதூர்’ (துணிச்சல்காரர்) என்றனர்.
2-ம் உலகப் போர் முடிந்த பிறகு 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்கு உதவினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1948-ல் காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை தனது அசாதாரணமான போர்த் திறன், வியூகத்தால் தோற்கடித்தார்.
1962-ல் சீனப் போரில் இந்தியா பின்வாங்கியபோது படைப்பிரிவுக்கு இவரை தலைமை ஏற்கச் சொன்னார் ஜவஹர்லால் நேரு. சீனப் படை மேலும் முன்னேறுவதை இவர் வெற்றிகரமாகத் தடுத்தார். 1969-ல் இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதியானார்.
1971-ல் இந்தியா பாகிஸ்தான் 2-வது போரின்போது, 14 நாட்களில் பாகிஸ்தானை சரணடையச் செய்தார். இது இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய, மிக விரைவான வெற்றியாகும். 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
அடுத்து ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தம் மூலம் வங்கதேசம் உருவானது. வங்கதேசத்தினர் இவரை பெரிதும் போற்றினர். 1968-ல் இவருக்கு பத்மபூஷண், 1972-ல் பத்மவிபூஷண், 1973-ல் பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டன.
40 ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என படிப்படியாக பல ரேங்க் பெற்றவர். நிர்வாகத்திலும் சிறந்து விளங்கினார். நீதி, நேர்மையுடன் செயல்பட்டார். ராணுவத்தில் இருந்த பிரச்சினைகளுக்கு உறுதியாக, நியாயமான முறையில் தீர்வு கண்டார்.
ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றினார். இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவையாற்றிய பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா 94 வயதில் (2008) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago