ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் (Otto Von Bismarck) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
பிரஷ்யாவின் ஷான்ஹாசன் நகரில் (தற்போது ஜெர்மனியில் உள்ளது) 1815-ல் பிறந்தார். தந்தை பண்ணை உரிமையாளர். ராணுவ அதிகாரியாகவும் பணியாற்றியவர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு சட்டம் பயின்ற பிஸ்மார்க், தந்தையைப் போலவே பிரபுத்துவத் தோரணையுடன் வலம் வந்தார். அதே சமயம், பொதுநலனிலும் அக்கறையுடன் செயல்பட்டார்.
சிறிது காலம் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். தனது கடிதங்களில் ஷேக்ஸ்பியர், பைரன் ஆகியோரது மேற்கோள்களை அதிகம் பயன்படுத்துவார். உரையாடல் கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, போலந்து மற்றும் ரஷ்ய மொழிகளில் திறன்பெற்று விளங்கினார்.
1847-ல் உருவாக்கப்பட்ட பிரஷ்ய சட்டமன்றத்தில் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1861-ல் பிரஷ்ய மன்னர் வில்லியம் இவரை தனது தலைமை அமைச்சராக நியமித்தார். வில்லியம், பெயரளவில்தான் மன்னராக இருந்தார். அதிகாரம், நிர்வாகம், முடிவெடுத்தல் ஆகிய அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பிஸ்மார்க்.
பிரஷ்யாவை ஐரோப்பாவின் வலுவான பேரரசாக நிறுவ 1864-ல் தொடர்ச்சியாகப் போர்களில் ஈடுபட்டார். டென்மார்க், ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்தார். 1862-1890 காலக்கட்டத்தில் முதலில் பிரஷ்யாவையும் பின்னர் ஜெர்மனியையும் இவர் ஆண்டார்.
‘இரும்புத் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட இவரது தலைமையில்தான் ஜெர்மனி ஒன்றிணைக்கப்பட்ட, நவீன பேரரசானது. ஜெர்மனியில் தனித்தனியாக இருந்த 39 மாநிலங்களை தனது சாதுர்யத்தால் ஒரே பிரஷ்யத் தலைமையின் கீழ் ஒன்றிணைத்தார். பல போராட்டங்களுக்கு பிறகு, ஜெர்மன் பேரரசின் பிரதமரானார்.
ஜெர்மனி ஒன்றிணைந்ததும் நாட்டு நலனில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவரது வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக ஜெர்மனி அபார வளர்ச்சி கண்டது. 1889-ல் முதியோர், ஊனமுற்றோர் காப்பீடு மசோதாவை அறிமுகம் செய்தார்.
முதியோர் ஓய்வூதியம், முதலாளிகளுக்கு சமமாக தொழிலாளர்களுக்கு காப்பீடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். 70 வயதான தொழிலாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், தொடக்கநிலை பணியாளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்கினார்.
மாநில அரசுகள் இத்திட்டங்களை நேரடியாக மேற்பார்வை செய்தன. பிரஷ்யாவின் அதிபர், அமைச்சர் போன்ற பதவிகளிலும் நீடித்தார்.
ஜெர்மனியில் ஏராளமான சீர்திருத்தங்களை செய்ததுடன் தனது பதவிக் காலத்திலும் அதற்கு பின்னரும்கூட ஜெர்மனி அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் பெரும் செல்வாக்குடன் விளங்கினார்.
1860 முதல் 1890 வரை ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் பெரும் ஆதிக்க சக்தியாக விளங்கிய ஆட்டோ வான் பிஸ்மார்க் 83 வயதில் (1898) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago