ஆன்ட்ரூ ஜாக்ஸன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

அமெரிக்காவின் 7-வது அதிபரான ஆன்ட்ரூ ஜாக்ஸன் (Andrew Jackson) பிறந்த தினம் இன்று (மார்ச் 15). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வட - தென் கரோலினாவின் எல்லைப் பகுதியில் பிறந்த வர் (1767) என்று கருதப்படுகிறது. பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தந்தை இறந்துவிட்டார். சிறு வயதில் முறையான கல்வி கற்க முடியவில்லை. 13-வது வயதில் அமெரிக்க புரட்சி யுத்தத்தில் உள் ளூர் போராளிக் குழுவில் இணைந் தார். சகோதரர்களில் ஒருவர் யுத்தத்தில் இறந்தார்.

* இன்னொரு சகோதரரும் இவரும் பிரிட்டிஷாரிடம் பிடிபட்டனர். சிறையில் பட்டினியும் சித்ரவதையும் அனுபவித்தனர். சிறையில் இருந்தபோது அம்மை நோய் கண்ட இவரது சகோதரர் இறந்தார். விரைவில் அம்மாவும் இறந்துவிட்டார். மாமாவால் வளர்க்கப்பட்ட இவர் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

* அரசியலிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். 1796-ல் அமெ ரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த வருடமே செனட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். இந்தப் பதவியில் சிறிது காலமே நீடித்தார். எஸ்டேட் உரிமையாளராக இருந்த இவர், வர்த்தகமும் செய்து வந்தார்.

* 1801-ல் டென்னிஸி (Tennessee) போராளிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது இவரது அரசியல் மற்றும் ராணுவ வாழ்க்கையின் அடித்தளமாக அமைந் தது. டென்னிஸி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1804 வரை இந்தப் பதவியில் நீடித்தார். 1812-ல் நடைபெற்ற நியு ஆர்லியன்ஸ் போரில் 5000 படை வீரர்கள் கொண்ட இவரது படை 7500 வீரர்களைக் கொண்ட பிரிட்டிஷ் படையை எதிர்கொண்டு மகத்தான வெற்றி பெற்றது.

* யுத்த ஹீரோவாகப் போற்றப்பட்டார். தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 1817-ல் இவர் தலைமையிலான படை ஃபுளோரிடா அனுப்பப்பட்டது. அதிலும் மகத்தான வெற்றிதான். ஃபுளோரிடா அமெரிக்காவுடன் இணைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து புளோரிடாவின் ராணுவ கவர்னராக நியமிக்கப்பட்டார்.

* 1822-ல் அமெரிக்க செனட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1824-ல் ஆதரவாளர்கள் இவரது தலைமையில் ஒரு கட்சியைத் தொடங்கினர். அதுதான் பின்னாளில் ஜனநாயக கட்சியாக மாறியது. 1828-ல் அமெரிக்காவின் 7-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* ‘மக்களின் ஜனாதிபதி’ என்று பெயர் பெற்றார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு விருந்தில் முதன் முதலாக பொதுமக்களை கலந்துகொள்ள வைத்தார். அரசுப் பதவிகள் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தார்.

* அரசுப் பதவிகளில் தேசபக்தர்களுக்கு முதலிடம் அளித் தார். போரில் காயமடைந்த, ஊனமுற்ற போர் வீரர்களுக்கு பதவிகளில் முன்னுரிமை அளித்தார். இவரது ஆட்சி காலத்தில், 1830களில் தேசிய பொருளாதாரம் அபார வளர்ச்சி கண்டது.

* அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக 1835-ல் நாட்டின் அனைத்து கடனும் அடைக்கப்பட்டது. இரண்டா வது முறையும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எட்டு வருடங்கள் இவர் ஆட்சியில் நீடித்தார். மிகவும் செல்வாக்கு மிக்க ஜனாதிபதியாக இவர் கருதப்படுகிறார்.

* வக்கீல், அரசியல்வாதி, நீதிபதி, நில உரிமையாளர் மற்றும் வர்த்தகர் என்று தான் ஈடுபட்ட அனைத்துக் களங்களிலும் பிரகாசித்த ஆண்ட்ரு ஜாக்சன் 1845-ல், 78-வது வயதில் காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்