ஆளுமை வளர்ச்சி ஆசான் என புகழ் பெற்றவரும், மிகச் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான ஏர்ல் நைட்டிங்கேல் (Earl Nightingale) பிறந்த தினம் இன்று (மார்ச் 12). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் (1921). சிறு வயதில், தாயை தந்தை கைவிட்டுவிட்டதால் சொந்த ஊரிலிருந்து வெளியேற நேர்ந்தது. தையல் வேலை பார்த்து தன் மூன்று குழந்தைகளை தாய் வளர்த்தார். சிறுவனாக இருந்த இவர் ஏழ்மை குறித்து சிந்தித்தார்.
ஏன் நாம் இவ்வளவு ஏழைகளாக இருக்கிறோம்? மற்றவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்களே? அது எப்படி? இந்தக் கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்தன. கலிபோர்னியாவில் உள்ள லாங் பீச் பொது நூலகத்தில் தனது கேள்விகளுக்கான விடையைத் தேடினார்.
17 வயதாக இருந்தபோது, அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) தாக்குதலின்போது உயிர்தப்பிய 12 பேரில் இவரும் ஒருவர். போர் முடிந்த பிறகு வானொலியில் வேலை பார்க்கத் தொடங்கினார். இவரது சேஞ்சிங் வேர்ல்ட் நிகழ்ச்சி மிகச்சிறந்த நிகழ்ச்சியாக போற்றப்பட்டது.
அமெரிக்காவில் மட்டுமல்லாமல், கனடா, மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து உள்ளிட்ட 23 நாடுகளில் மக்கள் மிகவும் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சியாக பிரபலமடைந்தது. நம்பிக்கை ஊட்டும் பேச்சாளராக மாறினார். தனிநபர் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு வழிகாட்டும் தலைசிறந்த வானொலி நிகழ்ச்சி தயாரிப் பாளராக ஏறக்குறைய 40 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
1949-ல் நெப்போலியன் ஹில் எழுதிய திங்க் அன்ட் க்ரோ ரிச் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதனால் வசீகரிக்கப்பட்ட இவர், இதுவரை எதைத் தேடி வந்தாரோ அதை அடைந்துவிட்டதாகவே உணர்ந்தார். புதிய சாதனைக்கான களத்தை அடையாளம் கண்டார்.
1956-ல் தி ஸ்ட்ரேஞ்ஜஸ்ட் சீக்ரட் என்ற ஒரு ஒலித்தட்டை உருவாக்கினார். ‘‘திங்க் அன்ட் க்ரோ ரிச்: தி எசன்ஸ் ஆஃப் இம்மார்ட்டல் புக் பை நெப்போலியன் ஹில், நேரேட்டட் பை ஏர்ல் நைட்டிங்கேல்’’ என்ற தலைப்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இது 10 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி, முதல் முதலாக கோல்ட் ரெகார்ட் தரத்தை அடைந்தது. இதையே தனது வெற்றி சூத்திரமாக மாற்றிக்கொண்டார்.
1960-ல் லியோட் கனன்ட் என்பவருடன் இணைந்து நைட்டிங்கேல் கனன்ட் (Nightingale-Conant) கார்ப்பரேஷனை நிறுவினார். 1987-ல் இந்த நிறுவனம் லீட் தி ஃபீல்ட் (Lead The Field) என்ற வெற்றிகரமான மற்றொரு ஆடியோ புத்தகத்தை வெளியிட்டது. 1976 டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு இவருக்கு கோல்டன் கேவல் விருது வழங்கியது.
1980களின் மத்தியில் ஏர்ல் நைட்டிங்கேல்ஸ் கிரேட்டஸ்ட் டிஸ்கவரி என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார். இதற்கு இவருக்கு இலக்கிய சேவைக்கான நெப்போலியன் ஹில் கோல்டு மெடல் வழங்கப்பட்டது.
சிறு வயதில் வெற்றிக்கான தனது தேடலைத் தொடங் கிய இவர், அதைத் தானும் கண்டறிந்து உலக மக்களுட னும் பகிர்ந்துகொண்டார். தான் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த தத்துவவாதியாகப் போற்றப்பட்டார்.
பூஜ்ஜியத்தில் தொடங்கி, பெரும் செல்வந்தராக உயர்ந்தது மட்டுமல்லாமல் ஏராளமானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த சாதனையாளரான இவர், 1989-ல் தனது 68-வது வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago