இத்தாலியக் கடல் பயணி, கண்டுபிடிப்பாளர் அமெரிகோ வெஸ்புகி (Amerigo Vespucci) பிறந்த தினம் இன்று (மார்ச் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
இத்தாலியின் புளோ ரன்ஸ் நகரில் (1454) பிறந்தவர். அங்கு சம யத் துறவியாக இருந்த தன் சித்தப்பா விடம் கல்வி கற்றார். உயர் கல்வி கற்க இவரது சகோதரர்கள் பைசா பல்கலைக் கழகத்துக்குச் சென்றனர். இவரோ வியாபாரம் செய்ய முடிவெடுத்தார்.
மெடிசி புளோரன்ஸ் வர்த்தக நிறுவனத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். முதலாளியின் நம்பிக்கை, அன்புக்குப் பாத்திரமானார். 1492-ல் காடிஸ் (ஸ்பெயின்) நகரில் உள்ள கிளை அலுவலகத்தின் ஏஜென்ட்டாக அனுப்பப்பட்டார்.
தனது உலகப் புகழ்பெற்ற சாகசக் கடல் பயணத்தை முடித்துவிட்டு வந்திருந்த கொலம்பஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அவற்றை எல்லாம் நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
அந்த சமயத்தில், கிழக்கிந்தியத் தீவுகளுக்கு 12 கப்பல்கள் வழங்குவதாக ஒப்புக்கொண்டிருந்த இத்தாலியக் கடல் வணிகர் ஒருவர் திடீரென இறந்துபோக, அந்த வணிக வாய்ப்பு வெஸ்புகிக்கு கிடைத்தது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இதைத் தொடர்ந்து பல வணிக வாய்ப்புகள் கிடைத்தன.
போர்ச்சுகல் நாட்டு மன்னரின் அழைப்பை ஏற்று, 1499 முதல் 1502 வரை அட்லான்டிக் கடல் பகுதியில் செல்லும் கப்பல்களில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.
1501-ல் இவரது மூன்றாவது கடற்பயணத்தின்போது தென் அமெரிக்காவின் தற்போதைய நகரங்களான ரியோ டி ஜெனிரோ, ரியோ டி லா பிளாட்டா ஆகியவை கண்டறியப்பட்டன. அதே பயணத்தில் ஒரு புதிய உலகத்தை (தென் அமெரிக்கா) கண்டறிந்ததாக ஒரு கடிதத்தில் வெஸ்புகி கூறியிருந்தார்.
தனது பயண அனுபவங்களை ஆவணப்படுத்தத் தொடங்கினார். தனது பெயரை அமெரிக்கஸ் வெஸ்புசியஸ் (Americus Vespucius) என்று லத்தீன் மொழி உச்சரிப்பிலேயே பயன்படுத்தினார். இவர் மொத்தம் 4 முறை கடற்பயணம் மேற்கொண்டார். 6 முறை கடற்பயணம் சென்றதாகவும் சில குறிப்புகள் கூறுகின்றன.
1507-ல் ஜெர்மனி ஆராய்ச்சியாளர் மார்ட்டின் வால்ட்ஸீமுல்லர் உலக வரைபடத்தை உருவாக்கினார். அதில், வெஸ்புகி கண்டறிந்த கண்டத்துக்கு ‘அமெரிக்கஸ்’ என அவரது பெயரையே சூட்டினார்.
உலகம் முழுவதும் மாலுமிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை வழிமுறைப்படுத்தவும், நவீனமயமாக்கவும் கடற்பயண வழிகாட்டிப் பள்ளி தொடங்கும் பொறுப்பை வெஸ்புகியிடம் வழங்கினார் போர்ச்சுகல் மன்னர்.
குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கி, தனது ஆர்வத்தாலும் உழைப்பாலும் பல கடற்பயணங்களை மேற்கொண்டு, பல புதிய இடங்களைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்ற வெஸ்புகி 58 வயதில் (1512) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago