உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குநரான அகிரா குரோசவா (Akira Kurosawa) பிறந்த தினம் இன்று (மார்ச் 23). இவரைப் பற்றிய முத்துக்கள் பத்து :
டோக்கியோவின், ஓமோரி மாவட்டத்தில் ஓய்மாச்சி என்ற ஊரில் பிறந்தவர் (1910). தந்தை, பழைய சாமுராய் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேற்கத்திய கலாசாரத்தைத் தன் குழந் தைகளுக்கு மறுக்கவில்லை. திரைப்படங்கள் பார்க்கவும் அனுமதித்தார். குரோசவா தனது 6 வயதிலேயே திரைப்படம் பார்த்தார்.
13 வயதான அகிரா, நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்க்க பயந்து நடுங்கினார். பயத்தை நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டும் என்று கூறி அவரது அண்ணன் அவரைப் பார்க்க வைத்தார். பிற்காலத்தில் திரைப்படங்கள் எடுக்கும்போது, கசப்பான உண்மைகளை எந்த சமரசமும் இன்றி, வீரியத்துடன் இவர் வெளிப்படுத்துவதற்கான காரணமாக இது இருக்கலாம் என்று கூறப்படுவதுண்டு.
1936-லிருந்து 1943 வரை முன்னணி இயக்குனர் யமமாட்டோ கஜிரோ உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் துணை இயக்குநராகப் பணிபுரியத் தொடங்கினார்.
1943-ல் இயக்குனராக உயர்ந்தார். 1880களின் ஜப்பானின் ஜூடோ மாஸ்டர்களைப் பற்றிய ‘சான்ஷிரோ சுகதா’ இவரது முதல் திரைப்படம்.
1948-ல் வெளிவந்த ‘டிரங்கன் ஏஞ்சல்’ திரைப்படம் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது. இவரது ரஷோமோன் திரைப்படம் 1951-ல் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதையும் இது வென்றது.
இகிரு (வாழ்வதற்காக) திரைப்படம் சினிமா வரலாற்றின் அற்புதமான படங்களில் ஒன்று என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து சொந்த நாட்டிலும் உலகம் முழுவதும் இவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. ஷேக்ஸ்பியர், பியோதர் தாஸ்தாயேவ்ஸ்கி ஆகியோரின் கதைகளைத் தழுவி திரைப்படங்களை இயக்கி உலகம் முழுவதும் புகழும் பாராட்டுகளும் பெற்றார்.
1960-ல் குரோசவா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கித் தனது படங்களை இந்த பேனரிலேயே தயாரிக்கத் தொடங்கினார். சாமுராயை முன்னணிக் கதாபாத்திரமாகக் கொண்டு ஏராளமான கேளிக்கைத் திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.
இவரைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. திரைப்படத் தயாரிப்பு சம்பந்தப்பட்ட திரைக்கதை, காட்சி வடிவமைப்பு, இயக்கம், எடிட்டிங், இசை உள்ளிட்ட ஏறக்குறைய அனைத்துக் களங்களைப் பற்றியும் அறிந்திருந்தார்.
மொத்தம் 30 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 9-வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கோல்டன் பரிசும், 1990-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாடமி விருதும் கிடைத்தன. கலைகள், இலக்கியம் மற்றும் கலாசாரம் என்ற பிரிவில் ஏசியன் வீக் பத்திரிகை இந்த நூற்றாண்டின் சிறந்த ஆசியர் (Asian of the Century) என்ற விருதை வழங்கியது.
இவரை கவுரவிக்கும் விதமாக சர்வதேச அளவில் இவரது பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. உலகத் திரையுலகின் மிக முக்கியமான ஒருவராகப் போற்றப்பட்ட அகிரா குரோசவா 1998-ல் 88-வது வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago