பிரான்ஸ் நாட்டின் அறிவியல் புனைக்கதை நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர் ஜூல்ஸ் கேப்ரியல் வெர்ன் (Jules Gabriel Verne). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
பிரான்ஸில் 1828-ல் பிறந்தவர். படகுகள், கப்பல்களைப் பார்த்து வளர்ந்தவர் என்பதால் சாகசப் பயணம் பற்றிய கற்பனைகளில் மிதந்தார். பள்ளியில் படிக்கும்போது, தனது கற்பனைகளை சிறுகதைகள், கவிதைகளாக வடித்தார்.
சட்டம் படிக்க பாரிஸுக்கு சென்ற பிறகும், நாடக உலகின் மீதான நாட்டம் குறையவில்லை. 1850-ல் வழக்கறிஞராகப் பணி யாற்றியபோது ஏராளமான நாடகங்களை எழுதினார். வருமானம் போதாததால், பங்கு விற்பனையாளராக வேலை பார்த்தார்.
உலகப் புகழ்பெற்ற த்ரீ மஸ்கிடேர்ஸ் (Three Musketeers) ஆசிரியரும் இவரது நண்பருமான அலெக்ஸாண்டர் டூமா தந்த ஊக்கத்தில் முழு நேர நாடக ஆசிரியராக மாறினார். ஹெட்சல் என்ற பதிப்பாளர் அறிமுகமானார். 1857-ல் இவரது முதல் புத்தகம் ‘லா சலோன் டி’ வெளிவந்தது.
1859-ல் பிரிட்டிஷ் தீவுகளுக்கு மனைவியுடன் கப்பல் பயணம் மேற்கொண்டார். ஓராண்டுகால பயண அனுபவமும் கற்பனையும் சேர்ந்து ‘பேக்வேர்ட்ஸ் டு பிரிட்டன்’ நாவல் உருவானது. தனது படைப்புகளில் பிரபஞ்சம் முழுவதையும் இவர் அடக்கியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட உறவுப் பையன் ஒருவன் இவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டான். உயிர் தப்பினாலும் காலில் நிரந்தர ஊனம் ஏற்பட்டது. ஒரு வாரத்தில் பதிப்பாளர் ஹெட்சல் இறந்தார். தொடர்ந்து இவரது அம்மாவும் இறந்தார். சோதனைகள் துரத்தினாலும் தொடர்ந்து எழுதினார். பயணங்களும் தொடர்ந்தன. ‘ட்வன்டி தவுசண்ட் லீக்ஸ் அண்டர் தி ஸீ’, ‘ரவுண்ட் தி மூன் அண்ட் டிஸ்கவரி ஆஃப் தி எர்த்’ புத்தகங்களின் 2 தொகுதிகள் வெளிவந்தன.
நிறைய பணம், புகழ் தேடி வந்தது. பூமி, வானம், கடல், விண்வெளி ஆகிய இடங்களில் நடைபெறும் சாகசங்களைப் பற்றியே இவரது கதைகள் இருந்தன. உலகின் அறிபுனை இலக்கியத் தந்தை என்று கருதப்பட்ட இருவரில் ஒருவர் இவர். (இன்னொருவர் ஹெச்.ஜி.வெல்ஸ்).
இவரது தி மிஸ்டீரியஸ் ஐலேண்ட், செகண்ட் ஃபாதர்லேண்ட், தி ஸ்கூல் ஃபார் ராபின்சன்ஸ் ஆகிய நாவல்கள் மிகவும் பிரபலம். பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உலகில் மிக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்டவற்றில் இவரது படைப்புகள் முன்னிலை வகிக்கின்றன.
இவரது பல படைப்புகள் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், வீடியோ கேம்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
2008-ல் விண்வெளியில் ஏவப்பட்ட விண்கலத்துக்கு இவர் பெயர் வைக்கப்பட்டது. விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் கண்டுபிடிக்கப்படும் முன்பே வெர்ன் தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago