அமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் கார்டனர் ஆலன் பிறந்தநாள் இன்று (ஜனவரி 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பிறந்தவர். 14 வயதில் லேக்சைடு பள்ளியில் படிக்கும்போதுதான் தன்னைப் போலவே கம்ப்யூட்டரில் அடங்கா ஆர்வமும் திறனும் கொண்டிருந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார். இருவரும் கல்லூரியில் படிப்பை நிறுத்திவிட்டு கம்ப்யூட்டருக்கு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர்.
இருவரும் இணைந்து 1975-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி. ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவினர். 1981-ல் இது வெளியானதில் இருந்து கணினிச் சந்தையில் அவர்களது வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியது.
மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்ஷன்’ என்று அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரனாக்கிவிட்டது. ஹாட்கின்ஸ் நோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
உலகம் முழுவதையும் இணையத்தால் இணைக்கும் நோக்கத்துக்காக `இன்டர்வெல் ரிசர்ச்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். சியாட்டில் சீஹாக்ஸ் நிறுவனம் உட்பட பல நிறுவனங்களை வாங்கி, உலகின் 7-வது மிகப் பெரிய கேபிள் நிறுவனத்தின் உரிமையாளரானார்.
ஆராய்ச்சிகளுக்கு உதவும் அமைப்புகளில் முதலீடு செய்தார். தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், ஊடகம் என பல துறை நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்களில் என பல கோடி டாலர் முதலீடு செய்துள்ளார்.
இவரது வல்கான் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துவருகிறது. கிடார் வாசிப்பது இவரது பொழுதுபோக்கு.
தான் சம்பாதித்த பணத்தைச் சமூகத்துக்குத் திருப்பித்தர வேண்டும் என்ற உந்துதலில் உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்துவருகிறார். இவர் தொடங்கியுள்ள பால் ஜி ஆலன் ஃபேமிலி பவுண்டேஷன் மூலம் கல்வி, கலை, அறிவியல், கேளிக்கை, விளையாட்டு, வர்த்தகம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் வழங்கினார். சிகிச்சையில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவும் வகையிலும் உலக சுகாதார அமைப்புக்கும் நிதி உதவி அளித்துள்ளார்.
‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
அறப்பணிகளுக்காக இதுவரை இவர் வழங்கியுள்ள தொகை 1.8 பில்லியன் டாலர். இவரது சொத்து மதிப்பு 17.1 பில்லியன் டாலர். உலகின் 55-வது பணக்காரர். 62 வயதாகும் இவர் சாதனைகள், நற்பணிகளை தொடர்ந்து செய்துவருகிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago