“சுவாமி, என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை. என்ன காரணம் என்று புரியவில்லை?” என்று துறவியிடம் கேட்டார் ஒரு செல்வந்தர்.
அதற்கு துறவி பதில் சொல்லவில்லை. அங்கே விளையாடி கொண்டிருந்த ஒரு குழந்தையை அருகில் அழைத்தார். குழந்தையின் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது. அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது.
மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார். தன்னுடைய ஒரு கையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது. அப்போது ஒரு பழம் நழுவி கீழே விழுந்தது. அதைக் கண்டு அந்தக் குழந்தை அழுதது.
அப்போது துறவி, இதை கவனித்துக் கொண்டிருந்த செல்வந்தரிடம், “இந்தக் குழந்தையைப் பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? போதும் என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் பிரச்சினை வராது. நிம்மதி கிடைக்கும்” என்றார்.
பணக்காரருக்கு தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்று புரிந்துவிட்டது!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago