ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று (ஜனவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர். 30 வயதில் பாளை யக்காரராகப் பொறுப்பேற் றார். வீரபாண்டியன், கட்ட பொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்று பல பெயர் களால் அழைக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் அரசு தனது ஆட்சியை நிலைநாட்ட, பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக் கும் ஆங்கிலேயத் தளபதி யால் கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க முடியவில்லை.
1797-ல் கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் வந்தார் ஆலன். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பிறகு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தார். ஆனால் குறிப் பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி அவரை அலைக்கழித்தார் கட்டபொம்மன்.
இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்தித்தார். அப்போது, சூழ்ச்சி செய்து இவரைக் கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். அந்த சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார்.
‘உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள்’ என்று கட்ட பொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளை யக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தனர்.
இவரை ஒழிக்க ஆங்கிலேய அரசு முடிவுகட்டியது. 1799-ல் வேறொரு தளபதியின் தலைமையில் இந்த பகுதியை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டது.
கடுமையாக நடந்த போரில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து வெளியேறி புதுக்கோட்டை மன்னரிடம் சரணடைந்தார். ஆங்கிலேயரின் வஞ்சகத்தால் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, ‘என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன்’ என்று கம்பீரத்துடன் முழங்கினார். 1799-ல் கயத்தாறில் 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறில் இவருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.
இவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ்ப் புராணங்கள், காவியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமியக் கதைகள் இடம்பெற்றுள்ளன. 1959-ல் பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கட்டபொம்மனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், தமிழக மக்களின் நெஞ்சங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நீங்கா இடத்தைப் பெற்றுத் தந்தது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago