ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக அறிவாற்றல் கொண்டவர் என புகழப்படும் இயற்பியல் அறிஞரான இவருடைய பிறந்தநாள் இன்று (ஜனவரி 8). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
இங்கிலாந்தின் ஆக்ஸ் போர்டில் பிறந்தவர். குடும்பத்தில் அனைவருமே அறிவுஜீவிகள். அப்பா மருத்துவ ஆராய்ச்சியாளர். சிறு வயதிலேயே ஆராய்ச்சித் திறன் கொண்டிருந்தார்.
16 வயதில் நண்பர்களுடன் சேர்ந்து, மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு கணித கோட்பாடுகளை தீர்ப்பதற்கான ஒரு கணினியை உருவாக்கினார். 1962-ல் இளங்கலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்டவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கவுரவ பட்டங்களைப் பெற்றுள்ளார். ராயல் சொசைட்டியின் உறுப்பினர். அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்படுகிறார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோய் அவரைத் தாக்கி இருப்பது அவருடைய 21-ஆம் வயதில் கண்டறியப்பட்டது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.
மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்கிறார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார்.
இந்த நோய் அவரது உடலியக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக செயலிக்கச் செய்து வந்தாலும், ஆராய்ச்சிகள், எழுத்துப் பணிகள், பொதுவாழ்வு ஆகிய எதையுமே அவர் நிறுத்தவில்லை.
‘இறைவன் உலகைப் படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சுவர்க்கம், நரகம் என்பதெல்லாம் தேவதைக் கதைகளில் வரும் கற்பனைகள்தான்’ என்ற இவரது இறையியல் கோட்பாடுகள் குறித்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
அண்டவெளித் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர். அண்டவியலும், குவான்டம் ஈர்ப்பும் (quantum gravity) இவரது முக்கியமான ஆய்வுத்துறைகள். கருங்குழிகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
கருங்குழிகளிலிருந்து துகள்கள் வெளியேறுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறு வெளியேறும் துகள்களுக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டது. இவரது ஏ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் மற்றும் தி யுனிவர்சல் இன் ஏ நட்ஷெல் ஆகிய இரண்டு புத்தகங்களும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஐன்ஸ்டீனுக்கு அடுத்த ஆற்றல் மிக்க அறிவியலாளர் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து தன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago